ரஜினியின் ”ஜெயிலர்” பட போஸ்டரை போல விஜய்யின் வாரிசு பட போஸ்டரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெற்று இருக்கிறது. கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தி இருந்தது.
தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
தளபதி 66க்கு வாரிசு என்ற டைட்டில் :
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்புக்கு சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இந்த படத்தில் இரு அண்ணன் ரோலில் ஒருவராக ஷ்யாம் நடிக்கிறார். மற்றொருவர் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு ‘வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
கூகுளில் இருந்து சுடப்பட்ட போஸ்டர் :
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் விஜய் இருக்கும் background கூகுளில் இருந்து சுடப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது விஜய் அமர்ந்து இருக்கும் கட்டிடம் Doheny Eye Institute என்ற கட்டிடத்தை போன்றே இருக்கிறது. உண்மையில் இது கூகுளில் இருந்து சுடப்பட்டதா அல்லது இந்த படத்தின் ஷூட்டிங் அங்கு எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
ரஜினியின் ஜெயிலர் :
பொதுவாக சிறிய பட்ஜட் படங்கள் தான் வேறு ஏதாவது படத்தின் போஸ்டரை சுட்டு அதை பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்களின் படங்களின் போஸ்டர்கள் கூட அப்படிபட்ட சர்ச்சையில் சிக்கிவிடுகிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.
இந்த படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று தலைப்பு வைத்து இருந்தனர். இதே தலைப்பில் ஹாலிவுட்டில் கூட ஒரு படம் வெளியாகி இருக்கிறது. சரி அது கூட பரவாயில்லை என்று பார்த்தல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருக்கும் background கூகுள் போட்டோஸ்ஸில் இருந்து சுடப்பட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு பலர் கேலி செய்து வந்தனர். ஆனால், அதே பார்முலாவை வம்சியும் பயன்படுத்தி இருப்பது தான் வேடிக்கை.