சென்னையில் இருந்தும் செல்லாத அஜித், வெளிநாட்டில் இருந்து வந்ததும் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய விஐய்.

0
37849
Vijay
- Advertisement -

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவேக்கின் திடீர் மறைவால் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் விஜய் மற்றும் அஜித், விவேக் மறைவிற்கு எந்த அறிக்கையும் இரங்கலையும் தெரிவிக்காமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் விவேக் விஜய் மற்றும் அஜித்துடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஜய்யுடன் பிகில் படத்திலும்,அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்து இருந்தார் விவேக்.

-விளம்பரம்-

பல்வேரு பிரபலங்கள் விவேக்கின் மறைவிற்கு நேரில் என்று ஆறுதல் செலுத்தினாலும். விவேக் மறைவிற்கு விஜய், அஜித் நேரில் வராதது பெரும் விமரிசனத்திற்கு உள்ளானது. இதில் விஜய், தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜார்ஜியால் இருந்தார். அதனால் அவரால் வர இயலவில்லை. ஆனால், சென்னையில் இருந்த அஜித் விவேக்கின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் விவேக் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

இதையும் பாருங்க : சட்டையில் ரெண்டே ரெண்டு பட்டன் – படு ஸ்டைலிஷ் அவதாரத்தில் கீர்த்தி சுரேஷ்..

- Advertisement -

நடிகர் விஜய்யின் தளபதி 65 படப்பிடிப்பு ஜார்ஜியாநடைபெற்று வந்தது. அங்கு, 18 நாட்கள்வரை படப்பிடிப்பு நடத்திய படக்குழு, முக்கியமான சண்டைக்காட்சி மற்றும் விஜய்க்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையேயான ஒரு டூயட் பாடலையும் படமாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் திட்டமிடப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இந்தியா திரும்பியுள்ளது.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து வந்ததும், விவேகி வீட்டிற்கு நேரடியா சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு எப்போதும் தான் ஆதரவாக இருப்பதாக கூறி உள்ளாராம் விஜய். விவேக் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இறுதியாக விஜய்யுடன் நடிகர் விவேக் ‘பிகில் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement