நிர்வாகிகளை காலில் விழ வைத்த புஸ்ஸி ஆனந்த் – டென்ஸனாகி நேரில் அழைத்து விஜய் செய்த செயல்.

0
482
bussy
- Advertisement -

விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகி புஸ்ஸி ஆனந்தின் செயலை குறித்து விஜய் வார்னிங் கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

-விளம்பரம்-

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திக்க விஜய் சென்று இருக்கிறார். விஜயை காண சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்களும், அவருடைய ரசிகர்களும் குவிந்திருந்தார்கள். இந்த சந்திப்பில் விஜய் ரசிகர்களுடன் பேசி இருந்தார்.

விஜயின் திடீர் சந்திப்பு :

பின் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும், விஜயின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜயின் இந்த திடீர் சந்திப்பு அரசியல்வாதிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் வாரிசு படத்திற்கு பல பிரச்சனைகள் வந்திருப்பதால் விஜய் இந்த சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

வார்னிங் கொடுத்த விஜய்:

இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்தை விஜய் வார்னிங் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இந்த கூட்டத்தின் போது புஸ்ஸி ஆனந்தை வரவேற்க வந்த நிர்வாகிகள் அவருடைய காலில் விழுந்து இருக்கிறார்கள். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதற்கு காரணம் விஜய் அரசியலில் என்ட்ரி ஆனால் அவரிடம் சீட்டு வாங்குவதற்காக தான் புஸ்ஸி ஆனந்திடம் நிர்வாகிகள் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த விஜய் டென்ஷன் ஆகி புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

புஸ்ஸி ஆனந்த் குறித்த தகவல்:

மேலும், 2006-ல் நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி என்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார் ஆனந்த். அதனால் தான் இவர் புஸ்ஸி ஆனந்த என்று அழைக்கப்பட்டார். எம்எல்ஏவாக இருந்தாலும், இவர் விஜய் மன்ற தலைவராக நீடித்து வந்தார். பிறகு விஜய்க்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்திற்கு, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியை விஜய் தந்தார். அதன்பிறகு முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார்.

Advertisement