எப்ப தலைவர வச்சி படம் பண்றயோ அப்போதா உன்ன டைரக்ட்டர்னு ஒத்துப்பேன் – மகனின் ஆசையை நிரைவேற்றிய விஜய்யின் தந்தை.

0
791
vijay
- Advertisement -

தமிழ் சினிமா துவங்கிய காகட்டத்திலிருந்தே எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜீத், சிம்பு – தனுஷ் என்று நடிகர்களுக்கு மத்தியில் இரண்டு பிரிவு ரசிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போதைய தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதுதான் பஞ்சாயத்தாக சென்று கொண்டிருக்கிறது. இதில் அடுத்த ரஜினியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருபவர் விஜய் தான். என்னதான் இவரது தந்தை ஒரு பிரபலமான இயக்குனர் என்றாலும் தன்னுடைய கடின உழைப்பினால் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார் விஜய். அதேபோல இதை தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர்

-விளம்பரம்-

இயக்குனர் எஸ் ஏ சி ஆரம்பத்தில் விஜயகாந்தை வைத்து தான் பல படங்களை இயக்கினார். மேலும், அந்த படங்களில் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டிலும் இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது 1985 ஆம் ஆண்டு வெளியான பலிதான் என்ற படத்தை எஸ் ஏ சி இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து தான் இவர் ரஜினியை வைத்து அதே ஆண்டு நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் பாருங்க : அடடே, மைனா நந்தினி மகன் என்னம்மா பாடுறாரு, பெரிய பாடகராக வருவாரு போல – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

எஸ் ஏ சியின் முதல் ரஜினி படம் :

ராபின் ஹுட் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி, அம்பிகா, பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலர் நடித்து இருந்தனர். 1980களுக்கு பின்னர் ரஜினிகாந்த் டபுள் ஹீரோ சபிஜக்ட்டில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், இந்த படத்தில் பாக்கியராஜும் ஒரு ஹீரோ போல தான் நடித்து இருந்தார். இருப்பினும் இதற்கு எந்த தடையையும் சொல்லாமல் நடித்து கொடுத்தார் ரஜினி. படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

விஜய் கேட்டுள்ள கேள்வி :

எஸ் ஏ சி ரஜினியை வைத்து இயக்கிய முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், எஸ் ஏ சி ரஜினியை வைத்து இயக்க காரணம் அவரது மகன் விஜய்யும் தான். இதுகுறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் விஜய். நடிகர் விஜய் அப்போதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். ஒருமுறை ரஜினியை குடும்பத்துடன் சந்தித்துவிட்டு வந்து இருக்கிறார் எஸ் ஏ சி.

-விளம்பரம்-

நான் சிகப்பு மனிதன் வாய்ப்பு :

வீடு திரும்பிய விஜய் எஸ் ஏ சியிடம் ‘ உங்களை எல்லாரும் பெரிய டைரக்டர்னு சொல்றாங்க ஆனா, ஏன் தலைவரை வைத்து இன்னும் ஒரு படம் கூட எடுக்கவில்லை. நீங்கள் அவரை வைத்து எப்போது படம் எடுக்கிறீங்களோ அப்போது தான் உங்களை டைரக்டர்னு ஒத்துப்பேன் ‘ என்று செல்லாமல் கேலி செய்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் முதல் இந்தி படத்திற்காக மும்பை சென்றுள்ளார் எஸ் ஏ சி.

17 முறை பார்த்துள்ள விஜய் :

அந்த சமயத்தில் தான் இவருக்கு மும்பையில் இருந்த தயாரிப்பாளர் பூர்ணாசந்திரராவ் தான் எஸ் ஏ சிக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார். இதை விஜய்யிடம் மகிழிச்சியுடன் சொல்லியுள்ள எஸ் ஏ சி ‘இப்போ நான் டைரகடர் ஆகிட்டேன்டா, ரஜினியை வைத்து டைரக்ட் பண்ண போறேன்’ என்று சொல்லியுள்ளார். விஜய்க்கு அவ்வளவு சந்தோசம் ஏற்பட்டதாம். மேலும், இந்த படத்தை விஜய் 17 முறை பார்த்துள்ளாராம்.

Advertisement