கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தளபதி விஜய் போட்டிருந்த நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்த சம்பவம் தான் உலுக்கிக் கொண்டிருக்கின்றது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம்:
அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவத்தில் காவல்துறை மெத்தனமாக இருந்ததால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பலரும் பதிவு போட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
#Vijay
— Thamaraikani (@kani_twitz24) June 20, 2024
கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய் @tvkvijayhq @actorvijay pic.twitter.com/XWLpJYdflc
விஜய் பதிவு:
முன்னதாக அரசை கண்டித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் வகையிலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சொன்னது:
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
— TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024
விஜய் திரைப்பயணம்:
கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் மட்டும் விஜய் நடிக்க இருக்கிறார். அதற்கு பின் இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் கட்சி பணிகளும் நடந்து வருகிறது.