அஜித் மச்சினிச்சிய தெரியும் விஜய் மச்சினிச்சிய பார்த்துள்ளீர்களா ? என்னங்க அச்சு அசலா சங்கீதா மாதிரியே இருக்காங்க.

0
1342
vijay
- Advertisement -

கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா.மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சினிமா துறையில் பிரபலமான இயக்குனரின் மகனாக விஜய் இருந்தாலும் அவருடைய படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் தான் முடிந்தது.

-விளம்பரம்-

விஜய் ரசிகை சங்கீதா :

பின்னர் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்று பார்த்தால் “பூவே உனக்காக” படம் தான்.இந்த படத்திற்கு பின் தான் விஜய் அவர்களுக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் வர தொடங்கின. பின்னர் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் கூடியது. மேலும்,விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. விஜய்க்கும்,சங்கீதாவுக்கு எப்படி திருமணம் நடந்தது என்று பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் பாருங்க : ரத்தக்கண்ணீரில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட நிபந்தனைகள். அதில் ஒன்று கே.பி.சுந்தராம்பாளை விட 25 ஆயிரம் சம்பளம் அதிகம் தர வேண்டும் என்பது.

லண்டனில் இருந்து வந்த சங்கீதா :

சங்கீதா அவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், இவர்கள் குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்தார்கள். நடிகர் விஜயை பார்க்க வேண்டும் .அவருடன் எப்படியாவது பேச வேண்டும் என்பதற்காக லண்டனில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தார். இதனைத்தொடர்ந்து சங்கீதா அவர்கள் தளபதி விஜய்யை பார்ப்பதற்கு பிலிம் சிட்டியில் நடந்த சூட்டிங்க்கு வந்தார் பின் விஜய் அவர்கள் சூட்டிங்கில் பிஸியாக இருந்தார்.

-விளம்பரம்-

மீண்டும் சங்கீதாவை சந்தித்த விஜய் :

ஆனாலும்,சங்கீதா அவர்கள் விஜய்யை சந்தித்தே தீர வேண்டும் என்று விடாமுயற்சியில் இருந்தார். பின் இதை அறிந்த விஜய் தனக்காக கஷ்டப்பட்டு இப்படி ஒரு பெண் ரசிகைக வந்திருக்கிறாரா? என்பதை தெரிந்து விஜய் அவர்கள் சங்கீதாவை வீட்டிற்கு அழைத்து சென்றார். சங்கீதாவும் விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்கள் சந்தித்து பேசி மகிழ்ந்தார். அடுத்த முறை சங்கீதா சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட நடிகர் விஜய் அவர்கள் சங்கீதாவை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். இந்த முறை சங்கீதாவும் விஜய் வீட்டிற்கு வந்து அனைவருடனும் நேரம் ஒதுக்கி மகிழ்ந்து வந்தார்.

பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் :

விஜய்க்கு சரியான ஜோடியாக சங்கீதா தான் இருக்க முடியும் என்று விஜய்யின் பெற்றோர்கள் முடிவு செய்தார்கள்.பின் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் நேரடியாக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?என்று கேட்டார். விஜய்யின் தீவிர ரசிகை சங்கீதாவிற்கு சொல்ல வேண்டும்மா! என்ன உடனே சரி என்று ஒத்துக் கொண்டார்.பின்னர் இவர்கள் திருமணம் குறித்து சங்கீதாவின் பெற்றோர்களை சந்தித்து சம்பந்தமாக வாங்க விஜயின் பெற்றோர்கள் லண்டன் சென்றிருந்தார்கள்.

சங்கீதாவின் தங்கை :

இரு வீட்டார் சம்மதத்துடன் விஜய்-சங்கீதா அவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சங்கீதாவை பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்தாலும் அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் என்பது பலர் அறிந்திராத விஷயம். இப்படி ஒரு நிலையில் தற்போது சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisement