சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாவீரன் படத்தின் FDFS படத்தை காண விஜய் மனைவி சங்கீதா திரையரங்கிற்கு வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் பிரபலமான இயக்குனரின் மகனாக விஜய் இருந்தாலும் அவருடைய படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்று பார்த்தால் “பூவே உனக்காக” படம் தான். இந்த படத்திற்கு பின் தான் விஜய் அவர்களுக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் வர தொடங்கின. பின்னர் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் கூடியது.
விஜய் படம், ஆடியோ லாஞ்ச்னு எதுக்குமே வரல. போட்டியாளர் சிகா படத்துக்கு வந்துருக்காங்க. Breakup is real 💔 https://t.co/4RFzNe4sIz
— L E E (@Leennister) July 14, 2023
மேலும்,விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. விஜயின் தீவிர ரசிகையான சங்கீதா விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது விஜய் யின் பெற்றோர்களையும் சங்கீதா சந்தித்து இருக்கிறார். சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். 22 ஆண்டுகள் சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாக வதந்திகள் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான மாவீரன் படத்தை காண சங்கீதா திரையரங்கிற்கு சென்று இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர நெட்டிசன்கள் சிலர் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் எந்த ஒரு விழாவிற்கும் சங்கீதா வரவில்லை, வாரிசு படத்தை கூட தியேட்டரில் வந்து பார்க்கவில்லை. ஆனால், இப்போது சிவகார்த்திகேயன் படத்தை தனியாக ஏன் பார்க்க வந்துள்ளார் என்று கேள்வி எழுப்பி வருவதோடு விஜய்யின் விவாகரத்து விவகாரத்தை மீண்டும் கிளப்பிவிட்டுள்ளனர்.