பிறந்தநாளன்று ரசிகையை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய். வைரலாகும் ட்வீட்டர் பதிவு.

0
3594
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். ரசிகர்கள் எல்லோரும் தளபதி விஜயின் படங்களை திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் பட்டாளம் எண்ணிலடங்காதவை. சமீபத்தில் தான் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. சினிமா பிரபலங்களை சந்திக்க ரசிகர்கள் எல்லோரும் பல முயற்சிகளை செய்வார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் பார்வையற்ற நபர் ஒருவர் செய்த முயற்சி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பார்வையற்ற நபர் ஒருவர் விஜய் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, விஜய் அண்ணா உங்களை சந்திக்க நான் 20 வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறேன். ஆனால், எல்லாம் தோல்வியில் தான் முடிந்து வருகிறது. அதோடு நீங்கள் உயிரோடு இருக்கும் போதே நாங்கள் இறந்து விட வேண்டும். ஏன்னா, நீங்கள் இல்லாத உலகத்தில் எங்களால் வாழ முடியாது என்று உணர்ச்சி வசமான விஷயங்களை கூறினார். அவர் கூறிய வார்த்தை கேட்டு பலரும் கண் கலங்கினர்.

- Advertisement -

இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரென்டிங் ஆகி இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பொதுவாகவே நடிகர்கள் தங்களுடைய பிஸியான வேலைகளிலும் ரசிகர்களை சந்திக்க பல முயற்சி செய்வார்கள். அப்படி தான் அந்த கண் பார்வை இல்லாத தம்பதிகள் சொன்ன விஷயத்தைக் கேட்டு தளபதி விஜய்யும் அவர்களை சந்தித்து உள்ளார். இந்த சமயத்தில் தான் மற்றொரு ரசிகரும் விஜய்யை சந்தித்து உள்ளார். தளபதி விஜய்யை சந்திக்கும் போது அன்று (ரசிகையின்)அவருடைய பிறந்த நாளாம். அதற்கு அவர் தனது டுவிட்டரில் கருத்து ஒன்று பதிவு செய்து உள்ளார்.

-விளம்பரம்-

அவர் கூறியது, இந்த 2020 ஆம் ஆண்டு வருடத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. என் வாழ்நாளிலேயே என்னுடைய பிறந்த நாளை இந்த அளவிற்கு நான் கொண்டாடியதில்லை. என்னுடைய பிறந்தநாள் அன்று தளபதி விஜய்யை சந்திப்பேன் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. இது என்னால் மறக்கவே முடியாத நிகழ்வு என்றும் கூறியிருந்தார். ரசிகையின் இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படம் குறித்து பல தகவல்கள் நாளுக்கு நாள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்த மாஸ்டர் படம் கோடை விடுமுறை அன்று திரையரங்கிற்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள்.

Advertisement