திடீரென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு வாழ்த்து சொல்லிய விஜய்- இது தான் காரணமா?

0
317
- Advertisement -

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது. லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இது தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வாழ்த்துப் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர், லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு திரு. ராகுல் காந்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த நாட்டிற்கு சேவை செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இவருடைய பதிவு தான் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், விஜய் அரசியலுக்கு எப்போ வருவார்? என்று பலருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது சில மாதங்களுக்கு முன்புதான் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சி பெயரை விஜய் அறிவித்திருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார். இதற்காக புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

கட்சி குறித்த தகவல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது விஜய் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்பதால் சில கட்சிகளை கூட்டணி வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதோடு தன்னுடைய கட்சிக் கொள்கைக்கு ஒத்து வரும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கருத்து:

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி உட்பட சில கட்சிகளுடன் ரகசியமாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டிருக்கும் நிலையில் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து சொல்லி இருப்பது தான் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதை வைத்து பலருமே தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டு வருகிறார்கள். இன்னும் சிலர், விஜய் ஏதோ மனதில் வைத்துக் கொண்டுதான் இப்படியெல்லாம் செய்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

விஜய் திரைப்பயணம்:

கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த ‘லியோ படம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இதை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்ற படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டது. தற்போது செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் படத்தினுடைய இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement