இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்றாலே அது ரசிகர்களுக்கு ஒரு திருநாள் போன்று தான். அவரது பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யும் திட்டமிட்டுள்ளனர். மேலும், விஜய்யின் பிறந்தநாளையொட்டி விஜய் 63யின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதே போல விஜய் பிறந்தநாளுக்காக விஜய் ரசிங்கர்கள் பல ஹேஷ் டேகுகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் #ThalapathiBdadyCpd என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும், விஜய் பிறந்தநாளையொட்டி பல்வேறு போஸ்டர்களையும் உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும் பெரியாரும் இருப்பதுபோல எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், “நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்” எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, இளைய தளபதி விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் இப்படி ஒரு போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.