அப்பாவுக்காக மகன் செய்த செயல்..? அதிர்ச்சியில் உறைந்த விஜயகாந்த.! புகைப்படம் உள்ளே

0
477
shanmuga-pandiyan-actor
- Advertisement -

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று வந்த நடிகர் சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ டாட்டூவாகக் கையில் வரைந்திருக்கிறார். இதைக் காண்பித்து விஜயகாந்த்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மகன்.

vijayakanth

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர், `சகாப்தம்’ படம் மூலம் கதாநாயகனாகத் தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட`மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து, `தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், லண்டன் சென்று திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். அந்த மகிழ்ச்சி தருணத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜயகாந்த் தற்போது தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

shanmuga-pandiyan

புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமல்லாமல், `தமிழன் என்று சொல் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற என் இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் என் கண்களை பச்சைகுத்தியதைக் (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement