போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன், அன்றே விளாசிய கேப்டன். வீடியோ இதோ.

0
8226
vijayakanth
- Advertisement -

தமிழ்நாட்டின் கேப்டன் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் அவர்கள் தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் சில ஆண்டு காலங்களாகவே சினிமாவில் நடிப்பதை விட்டு முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். 1978 ஆம் ஆண்டிலே தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இதுவரை தமிழ் மொழி படங்கள் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்தது கிடையாது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று பேசிய பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தற்போது நாடே சாத்தான்குளத்தில் நடந்த தந்தை,மகன் இறப்பு சம்பவத்தால் கொந்தளித்து போய் உள்ளது. உலகம் முழுவதும் இந்த சம்பவத்தை எதிர்த்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் சில வருடங்ககுக்கு முன்பு பேசிய ஒரு வீடியோ தற்போது செம்ம வைரல் ஆகிறது. அதில் அவர் போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறர்கள்.

-விளம்பரம்-
Advertisement