பிரபுதேவா கோரியோகிராபியில் 180 ஷாட்டில் ஆடியுள்ள கேப்டன் – இதுநாள் வரை இந்த பாட்ட பார்த்திருக்கீங்களா ?

0
1127
prabudeva
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த ஒரே நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமா திரையில் அனைவருக்கும் நல்ல உணவு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியவர் விஜயகாந்த் தான்.

அதனால் தான் இவரை புரட்சி கலைஞர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது இவருடைய கட்சியை இவரது குடும்பம் தான் கவனித்து வருகிறது. கேப்டன் என்று சொன்னதும் முதலில் நினைவிற்கு வருவது அவரது சண்டையும் நடனமும் தான்.

-விளம்பரம்-

கேப்டன் பெரும்பாலான படங்களில் மிகவும் சிம்பிளான நடன மூமென்ட்டை தான் போட்டு இருப்பார். ஆனால், அதுவே ரசிக்கும்படி இருக்கும். ஆனால், கேப்டன் நடன புயல் பிரபுதேவா கொரியாகிராபியில் பட்டையை கிளப்பி நடனமாடிய பாடல்களும் இருக்கிறது என்பது பலர் அறிந்திராத ஒன்று. பிரபுதேவா சினிமாவில் வந்தே புதிதிலேயே கேப்டனுக்கு பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் பானுப்பிரியா நடிப்பில் வெளியான ‘பரதன்’ படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அந்த படத்தில் வரும் ‘கையில் வந்த மின்சாரம்’ பாடல் 180கும் மேற்பட்ட ஷாட்கள் எடுத்துக்கொண்டதாம். இதுகுறித்து பிரபுதேவாவே பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement