சாலையோரம் அனாதை பிணமாக இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குனர் – அடக்கம் செஞ்சது யார் பாருங்க.

0
154
- Advertisement -

அனாதை பிணமாக கிடந்த விஜய்காந்தின் வெற்றிப்பட இயக்குனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திரை உலகில் ஒரு காலத்தில் வெற்றி படம் கொடுத்த பல பிரபலங்கள் இறுதி காலத்தில் அனாதையாக யாருடைய ஆதரவும் இல்லாமல் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இன்றும் பல இயக்குனர்களும் நடிகர்களும் சினிமா நமக்கு வாழ்க்கை அளிக்காதா? வாய்ப்பளிக்காதா? என்று சுற்றி வருகின்றனர். அந்த வகையில் ஏவிஎம் சுற்றி அனாதையாக உயிர் இழந்தவர் பிரபல இயக்குனர் தியாகராஜன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்தவர் இயக்குனர் தியாகராஜன். இவர் சினிமா தொடர்புடைய டிஎப்டி படிப்பை படித்தவர்.

-விளம்பரம்-
DirectorMThiyagarajan, Maanagarakaaval, AVM,

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விபத்து ஒன்றில் அடிபட்டு கோமா சென்று பின் குணமாகி சினிமாவில் சில படங்களை இயக்கினார். மேலும், இவர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, விஜய்காந்த்தின் மாநகர காவல் படம்1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், சுமா, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதோடு இது ஏவி.எம்.ன் 150 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவரால் சினிமாவில் நிலைக்க முடியவில்லை.

- Advertisement -

பின் ஆதரவு இன்றி வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்தித்தாள் உடன் அம்மா உணவகத்தின் உணவு மூலம் தன்னுடைய காலத்தை கழித்து வந்தார். இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் அவர்கள் சென்னை மாநகர தெருக்களில் அனாதையாக அலைந்து திரிந்து கவனிப்பின்றி இன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் இறந்து உள்ளார். அவரது உடலை மாநகர காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சினிமா உலகம் கைவிட்ட நிலையில் மாநகர காவல்துறை அவருக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவில் வெற்றி மேல் வெற்றி படம் கொடுத்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் வெற்றியடையவில்லை.

catsjj

இவரின் மறைவு குறித்து இணை இயக்குனர் நீலம் கனிஷ்கா என்பவர் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல்துறை துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது. இது காலத்தின் கோலமின்றி வேறென்ன..? “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ !!!” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், வெற்றியில் மட்டும் கை கொடுக்கும் இந்த சினிமா உலகம் தோல்வியடைந்த தன் துறையை சேர்ந்தவர்களை கண்டுகொள்வதே இல்லை.

-விளம்பரம்-

இறந்த பின்தான் அவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதும் வருத்தம் தெரிவிப்பதும் என்றும், ஏவிஎம்க்கு வெற்றி படங்களை தந்த இயக்குனர் தியாகராஜன் அந்த ஸ்டுடியோவை தான் பல வருடமாக சுற்றி வருகிறார். ஆனால், இவரை ஒரு கண்கள் கூட பார்த்திருக்காதா? என்றும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement