சிம்ரனை காதலித்த போது தன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஜு சுந்தரம் செய்த செயல் – கடுப்பாகி கேப்டன் செய்த விஷயம்.

0
699
simran
- Advertisement -

பிரபல நடன இயக்குனரை சிம்ரன் காதலித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். இவர் முன்னனி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர். சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் பல்வேறு விருதுகளும் கிடைத்தது. இவர் நடிகையாக மட்டும் இல்லாமல் துணை நடிகை, வில்லி என்று பல கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதனிடையே சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சிம்ரன் குடும்பம்;

இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் நடித்து வருகிறார் சிம்ரன். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று இருக்கிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:

பேட்ட படத்தை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார் சிம்ரன். தற்போது மாதவனே இயக்கி, நடித்து வெளியாகி இருந்த படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

சிம்ரன் காதலித்த நபர்:

இந்த நிலையில்நடிகை சிம்ரன் அவர்கள் நடன இயக்குனரை காதலித்து இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. நடிகை சிம்ரன் அவர்கள் பிரபல நடிகர் பிரபுதேவாவின் அண்ணனும், நடிகரும், நடன இயக்குனருமான ராஜசுந்தரம் மாஸ்டரை சில ஆண்டுகள் காதலித்திருந்தார். இவர்கள் இருவரின் காதல் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் காதலித்த காலத்தில் சிம்ரன் நடித்த படத்திற்கு நடன இயக்குனராக ராஜசுந்தரம் தான் பணிபுரிந்து வந்தார்.

சிம்ரன் காதலால் கடுப்பான விஜயகாந்த்:

அப்போது ஹீரோவாக அந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். விஜயகாந்த் மற்றும் சிம்ரன் டூயட் பாடல் படமாக்கப்பட்டு வந்தது. ஆனால், விஜயகாந்தை ஓரிடத்திலும், சிம்ரனை வேறொரு இடத்திலும் ராஜு சுந்தரம் நடனம் சொல்லியிருந்தார். இதனால் கடுப்பான விஜயகாந்த், ராஜு சுந்தரத்தை அழைத்து இப்படி எல்லாம் நடனமாடி பாடலை எடுத்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடல் எடுங்கள் என்று சொன்னார். பின்னர் ராஜூசுந்தரம் சிம்ரன், விஜயகாந்த் இருவரையும் ஒன்றாக ஆடவைத்து பாடலை எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement