அந்த இடத்தில் அப்பாவுக்கு எலும்பே கிடையாது,காரணம் இது தான்- மனவேதனையில் விஜயகாந்த் மகன் அளித்த அதிர்ச்சி தகவல்

0
883
vijayakanth
- Advertisement -

சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் என்னுடைய அப்பாவுக்கு அந்த இடத்தில் எலும்பு கிடையாது என்று மனவேதனையில் விஜயகாந்த் மகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.

- Advertisement -

விஜயகாந்த் குடும்பம்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

vijayakanth

விஜயகாந்த் மகன்கள்:

இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து வருகிறார். விஜய பிரபாகரன் தன் தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக விஜயகாந்துக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் உடல்நிலை:

அதோடு உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த் அவர்கள் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் தன் தந்தை குறித்து விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய அப்பா ஒரு தீவிர உழைப்பாளி. அவர் காலை 6 மணிக்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக 5.30 மணிக்கு எல்லாமே போய்விடுவார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் முழு நேர சினிமாவில் தீவிரமாக இருந்தார். பெரும்பாலும் அப்பா வீட்டில் இருக்கவே மாட்டார்.

vijayakanth

அப்பா பட்ட கஷ்டங்கள் குறித்து சொன்னது:

அப்படி வீட்டிற்கு வந்தாலும் முதலில் அவர் எங்கள் இருவரையும் அழைத்து சந்தோஷமாக விளையாடுவார். எங்களுக்கென்று எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அவர் அந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்குவார். எங்களுக்கு பிறகு அடுத்ததாக இரு நாய்களை வளர்த்தார். அந்த நாய்களிடமும் சென்று பேசி விளையாடுவார். அதற்கு பிறகு தான் என்னுடைய அப்பா இயல்பு நிலைக்கு வருவார். அப்பா கால்களில் நிறைய கட்டிருக்கும். சண்டை காட்சிகளில் எரியும் செங்கலை உடைத்து செல்ல வேண்டும். அதில் காலில் பல காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இன்னொரு படத்தில் டம்மி ஹன் வைத்து சுடும் காட்சி ஒன்று இருந்தது. சுடுபவர் சோதனையாக துப்பாக்கி அழுத்த அப்பாவின் கண்ணுக்கு கீழ் புருவத்தில் அது துளைத்தது. இப்போதும் அந்த இடத்தில் அப்பாவுக்கு எலும்பு இருக்காது என்று மன வேதனையில் கூறியிருக்கிறார்.

Advertisement