நெதர்லாந்தில் இருக்கும் ‘கேப்டன்’ மகனா இது? என்ன இப்படி ஆகிட்டார். பார்த்திபன் மகன் வெளியிட்ட புகைப்படங்கள்.

0
22185
shanmugapandian
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சகாப்தம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ‘மதுர வீரன்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகர் சண்முக பாண்டியன். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்தார். இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மீனாக்ஷி என்பவர் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பால சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நெதர்லாந்து சென்றிருந்த நடிகர் சண்முக பாண்டியன் ‘கொரோனா’ லாக் டவுன் காரணமாக அங்கயே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில், நடிகர் சண்முக பாண்டியன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார். லாக் டவுன் டைம் என்பதால் இப்புகைப்படங்களை ஃபேஸ் டைம் எனும் வீடியோ கால் மூலம் எடுத்திருக்கிறார் ராக்கி பார்த்திபன். ராக்கி பார்த்திபன், பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது ‘மித்ரன்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சண்முக பாண்டியன்.

Advertisement