வீட்டிற்கு தெரியாமல் கமல் படத்தில் நடித்து வீட்டில் அடிவாங்கிய வடிவுக்கரசி. அவரே சொன்ன தகவல்.

0
6553
vadivukarasi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்பது காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை வடிவுக்கரசி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். இவர் இதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகியும் பின்னர் குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். தற்போது நடிகை வடிவுக்கரசி அவர்கள் தன்னுடைய திரையுலக அனுபவங்களை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-
vadivukkarasi old images க்கான பட முடிவு

- Advertisement -

அதில் அவர் கூறியது, எங்களுடைய சொந்த ஊர் வேலூர் பக்கம் உள்ள ராணிப்பேட்டை தான். என்னுடைய அப்பா சண்முகம். சினிமா மீது அவருக்கு அதிக ஆர்வம் உடையவர். அதனால் தான் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்து கொண்டிருந்தார். பின்னர் அப்பப்ப படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் எங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு பைனான்ஸ் தொழில் திவாலாகியது. இதனால் நாங்கள் எங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தோம். அதோட சினிமாவில் பிரபல இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என்னுடைய பெரியப்பா. ஆனாலும், நாங்கள் சினிமா பார்க்க தியேட்டருக்கு போக கொஞ்சம் கஷ்டமா இருக்கும். சென்னைக்கு வந்து என்னுடைய படிப்பை தொடங்கினேன்.

இதையும் பாருங்க : அழகு சாதன பொருளை விளம்பரபடுத்த மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஆல்யா மானஸா.

குடும்பச் சூழலின் காரணமாக பியுசி வரை தான் படித்தேன். பின்னர் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு சேர்ந்தேன். அப்போது தூர்தர்ஷனில் “கண்மணி பூங்கா” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் பள்ளி ஒன்றில் டீச்சராக 75 ரூபாய் சம்பளத்துக்குசேர்ந்தேன். அதே சமயத்தில் புடவைக்கு டிசைன் பண்ணும் கடையில் வேலை பார்த்து வந்தேன். அந்த கடை முதலாளி தான் கன்னிமாரா ஹோட்டலில் ஆள் தேவை என்று சொல்லி என்னை அங்கு சேர்த்து விட்டார். இந்த சமயத்தில் தான் எனக்கு சினிமாவில் பாரதிராஜா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அதைப் பற்றியெல்லாம் நினைக்காமல் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-
vadivukkarasi

ஒரு நாள் நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கும்போது தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. சாரும் அவருடைய மேனேஜரும் என்னை பார்க்க வந்து இருந்தாங்க. பாரதிராஜா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார்கள். அதுவும் கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் முதல்ல முடியாதுன்னு சொன்னேன். அப்ப என்னோட வேலை செய்யுறவங்க இந்த சான்ஸ மிஸ் பண்ணாதே என்று சொன்னார்கள். மேலும், நான் வீட்டுக்கு தெரியாம அப்ப அப்ப போய் படத்தில் நடித்து வந்தேன். எனக்கு வசனங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது பாக்யராஜ் சார் தான். அந்த படம் தான் “சிகப்பு ரோஜாக்கள்” 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. பாரதிராஜா அவர்கள் படத்தில் ஒரு சீன் எடுக்க வேண்டும் என்று என்னை அழைத்து வர என் வீட்டிற்கு வந்தார்கள்.

பின்னர் என் போட்டோ எடுத்து என் அப்பாவிடம் காண்பித்தார்கள். என் அப்பா பயங்கர கடுப்பாகி கோபத்தில் இருந்தார். நான் என் வேலையை முடித்துட்டு வந்த போது இது பத்தி எல்லாம் என்கிட்ட கேட்டார். சினிமால நடிக்கிறேன் நான் ஒத்துக்கிட்டேன். அப்ப அப்பா கிட்ட செம்ம அடி கிடைத்தது. அப்போது எங்க வீடே கலவர பூமியாக இருந்தது என நடிகை வடிவுக்கரசி தன் திரையுலக அனுபவங்களைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement