18 வருடங்கள் சபரி மாலைக்கு சென்று வந்த விஜயகாந்த் – ரசிகர்கள் செய்த செயலால் நிறுத்திய காரணம்.

0
517
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் இவர் தமிழில் மட்டுமில்லாமல் உலக மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் கதாபாத்திரங்களில் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்: மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் இது கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். பின் உடல் நல குறைவால் சில ஆண்டுகளாக விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த காலங்கள் தமிழ் சினிமாவின் கருப்பு வைரம் என போற்றப்பட்ட நடிகர் விஜயகாந்த் தீவிர கடவுள் பக்தி கொண்டவர். இவரின் பூஜை அறையில் எல்லா மதங்களுக்கும் பூஜை செய்யும் வகையில் புகைப்படங்கள் இருக்குமாம். இவரது நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் தான் இவரை வில்லனாக நடித்தது போதும் இனி கதாநாயகனாக நடிக்க சொன்னாராம். அதிலிருந்துதான் விஜயகாந்த சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறாராம்.

-விளம்பரம்-

இவர் பிசியாக இருந்து காலங்களில் 18 படங்களை ஒரே வருடத்தில் எடுத்து ரஜினி, கமல் போன்றவர்களுக் கெல்லாம் ஈடு கொடுக்கும் நேரத்தில்தான் நமக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கிறது, நாமும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம் என்று தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சாப்பாடு போடா ஆரம்பித்து இன்று வரை அதனை எல்லா நிறுவங்களும் நடை முறை படுத்தி வருகிறது அதற்கு காரணம் கேப்டன் விஜயகாந்த்.

மேலும் இவரின் பெருந்தன்மையை கூற ஆரம்பித்தால் கூறி கொண்டே போகலாம் அந்த அளவிற்கு மக்களுக்கு நல்லது செய்திருக்கிறார் விஜயகாந்த். சமீப காலத்தில் கொரோன தாக்கிய போது கூட பல மக்களுக்கு தன்னுடைய மண்டபம் ஒன்றில் தினமும் சாப்பாடு வழங்கியிருந்தார். இப்படி மக்களுக்கு பல நன்மைகள் செய்த விஜயகாந்த் அதிக கடவுள் பக்தி கொண்டவர் இதனாலேயே பிரபலமான நடிகராக ஆனா பிறகும் கூட 18 வருடங்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு முறை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருக்கும் போது விஜயகாந்த் வந்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் அறிந்தது உடனே அங்கு ஏராளமான ஐயப்ப பக்த்ர்கள் வந்துள்ளனர். இதனால் அங்கு பக்தர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதற்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் தன்னால் மற்றவர்களுக்கு எந்த இடையூரும் வரக்கூடாது என்பதற்காக ஐயப்பன் கோவில் செய்வதை நிறுத்தி விட்டாராம்.

Advertisement