மனைவியின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய கேப்டன் – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

0
1151
vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-221.jpg

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

- Advertisement -

கேப்டனின் உடல் நலப் பிரச்சனை :

அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர்.

சினிமா மற்றும் அரசியலில் பிரேக் :

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட கேப்டன் அவர்கள் தனது கட்சிக்காக எந்த ஒரு பிரச்சாரமும் செய்யவில்லை, அவ்வளவு ஏன் தன் கட்சியை ஆதரித்து வீடியோ கூட வெளியிடவில்லை. இதனால் கேப்டன் எப்படி தான் இருக்கிறார் என்ற கவலை ரசிகர்கள் மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் இருந்து கொண்டு வருகிறது. அதே போல கேப்டன் நலமுடன் இருக்கிறார் விரைவில் அவர் பழையபடி வருவார் என்று தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

கேப்டனின் சமீபத்திய புகைப்படம் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் இருந்துவந்தனர். ஒரு காலத்தில் எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே என்று கவலைப்பட்டுவந்தனர். இப்படி ஒரு நிலையில் கேப்டன் மனைவி பிரேமலதா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தன் மனைவியின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கேப்டன்.

This image has an empty alt attribute; its file name is 1-222.jpg

விஜய் ஆண்டனி பாடத்தில் விஜயகாந்த் :

இது ஒருபுறம் இருக்க கேப்டன் அவர்கள் 11 ஆண்டு கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி விஜய்மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் மில்டன் இயக்கி வரும் இந்த படத்தை Infinity film ventures தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தான் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனை சமீபத்தில் இயக்குனர் மில்டனும் உறுதிப்படுத்தினார்.

Advertisement