எனக்கு கயல்விழி மேல் பொறாமை கிடையாது. நீங்க நல்லா வாழனும் மாமா – விஜயலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ.

0
4471
Seeman
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி சொல்லி செய்திருந்தார்.

- Advertisement -

இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல்வேறு கருத்துக்களும் எழுந்தது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு முன்பே பிரபல நடிகரை டேட்டிங் செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் விஜயலட்சுமியை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயலட்சுமி திமுக அரசிடம் சீமான் குறித்து புகார் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் முதல்வரிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக் கொண்டு வருகிறார் சீமான்.

ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்திற்கும் வருத்தம் தெரிவிக்கவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டோம் என்று கூட நினைக்காமல் அசால்டா இருக்கிறார். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தான் சீமான் விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஒரு நியாயத்தை வாங்கி தர வேண்டும் என்று கூறி 4 நாட்களுக்கு முன் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனை எடுத்து தற்போது இன்னொரு வீடியோவும் விஜயலட்சுமி வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சீமானை கைது செய்யவும்
அவருடைய பெயரை களங்கப்படுத்தவும் தான் என்னை ஒரு காயினாக வைத்து நீங்க பயன்படுத்துகிறீர்கள். அது நடக்கவில்லை என்றதும் என்னை டார்கெட் செய்யாதீங்க.

-விளம்பரம்-

விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ:

சும்மா சீமானை செருப்பால் அடிப்பேன் என்று என் சந்தோஷத்தில் மண்ணை அள்ளி போடாதீங்க. எனக்கு என்ன பண்ணனும் தெரியும். அதை சீமான் பண்ணுவார். நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பண்ணுவார்கள். உங்கள் வேலையை பாருங்கள் நான் சீமானை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன். நான் அவருடன் வாழ்ந்திருக்கிறேன். சீமான் முதல் மனைவி நான். அவரை என் மூச்சாக பார்க்கிறேன். சீமான் மாமா என்று தான் நான் சொல்லி பேசப்போகிறேன். நான் மாமான்னு சொன்னால் தான் நீங்கள் யாரை அழவிட்டு இருக்கீங்கன்னு அவருக்கு ஞாபகம் வரும்.

சீமான் குறித்து சொன்னது:

நான் நிம்மதியாக தூங்கி 12 வருடம் ஆகிவிட்டது. சீமான் மாமா தினமும் நான் அழுது கொண்டிருக்கிறேன். இரண்டு வருடமாக நீங்கள் என் கூட வாழ்ந்தபோது விதவிதமான கனவுகளை என்கிட்ட சொன்னீங்க. விதவிதமான நம்பிக்கை கொடுத்தீங்க. ஆனால், திடீரென்று என்னை பைத்தியம் ஆக்கிவிட்டு நடுரோட்டில் விட்டு விட்டு போயிட்டீங்க. எனக்கு எப்போ நியாயம் கிடைக்கப்போகுதுன்னு எல்லோருமே கேக்குறாங்க. நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று கர்நாடக மக்களுக்கு தெரியும். எத்தனை நாள் தான் நம்முடைய விஷயத்தை பொதுவெளியில் அசிங்கப்பட வைத்துக் கொண்டே இருக்க போறீங்க? இதை நீங்களே பேசி பிரச்சனையை முடித்துவிட்டு போயிருக்கணும். இல்லையா நான் அவமானப்படுவதை எத்தனை நாள் தான் நீங்க பார்க்க போறீங்க? சீமான் மாமா.

விஜயலக்ஷ்மி வைத்த கோரிக்கை:

உங்க கூட வாழ்ந்த மனசாட்சி உங்களுக்கு இருந்துச்சுன்னா எனக்கு உதவுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே. உங்களுக்கு மனைவி, குழந்தை இருக்காங்க. கயல்விழி மேல பொறாமை கிடையாது. நான் உங்களுக்கு ஒவ்வொரு முறை வீடியோ அனுப்பும் போதும் கயல்விழியை நல்லா பாத்துக்கோங்க, பிரபாகரன் பாப்பாவ நல்லா பாத்துக்கோங்கன்னு தானே சொல்லி இருக்கேன். என்னைக்காவது என் கூட வந்து வாழுங்கள் மாமான்னு உங்களை கூப்பிட்டேனா? எனக்கு கயல்விழி மேல் பொறாமை கிடையாது. நீங்க நல்லா வாழனும். நம்ம பிரச்சனையை தீர்க்க வேண்டியது உங்கள் கடமை தான். நம்ம விஷயத்தை நீங்கள் நினைத்தால் தீர்த்து வைக்க முடியும். எனக்கு ரொம்ப அசிங்கமாக இருக்கு சீமான் மாமா என்று பேசி இருக்கிறார்.

Advertisement