RRR படத்தை விடுங்க, 32 ஆண்டுக்கு முன்பே Pan இந்திய லெவலில் ஹிட் கொடுத்த விஜயசாந்தியின் படம் பற்றி தெரியுமா ?

0
1677
vijayashanthi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு பெண் இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது, திரைப்பட தேசிய விருது உட்பட பல விருதுகளை விஜயசாந்தி வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை விஜயசாந்தி அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். பின் இவர் 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். இப்படி இவர் பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார்.

- Advertisement -

ரீ-என்ட்ரி கொடுத்த விஜயசாந்தி:

இதனால் நடிகை விஜயசாந்தி அவர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை விஜயசாந்தி அவர்கள் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து  மழை ! | Lady super star Vijayashanthi celebrates his birthday today - Tamil  Filmibeat

வைஜெயந்தி ஐபிஎஸ் :

இப்படி தென்னிந்திய சினிமா உலகில் உச்சகட்ட நடிகையாக ஹீரோக்களுக்கு மீறிய புகழ் மற்றும் சம்பளத்துடன் அசத்தி இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இந்நிலையில் காவல் துறை அதிகாரியாக விஜயசாந்தி மிரட்டி இருந்த படத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். 1990ல் தெலுங்கில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் கர்த்தவ்யம். இதன் மூலம் தான் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. இந்த திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியானது. தமிழிலும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி நேர்மையாக இருப்பதால் தன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டங்கள்.

-விளம்பரம்-

சினிமாவின் கோணத்தை மாற்றியவர்:

பின்னர் அதிலிருந்து மீண்டு எதிரிகளை அழிப்பதையும் மையமாக கொண்ட கதை. படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விஜயசாந்திக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகில் கதாநாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஒரு சில பாடல்கள் பாடல் காட்சிகளுக்கு மட்டும் கதாநாயகிகள் தேவைப்படும் பிம்பத்தை உடைத்தெரிந்து ஆண்களுக்கு நிகராக மிரட்டி இருந்தவர். மேலும், விஜயசாந்தி போலீஸ் அதிகாரியாக சண்டை போடும் ஸ்டைல், வசன உச்சரிப்பிலும் போலீஸ் அதிகாரிக்கு இருக்கும் குணமும் பிரம்மிக்க வைத்தது.

போலீஸ் வேடத்தில் விஜயசாந்தி:

கதாநாயகர்களுக்கே டப் கொடுத்திருந்தார் விஜயசாந்தி. பொதுவாகவே போலீஸ் படங்கள் என்றால் ஹீரோக்கள் மட்டும் தான் மாஸ் காட்டி வருவார்கள். அதை உடைத்து எரிந்து பெண் போலீசாக வந்து ஹீரோக்களுக்கு இணையாக ஆக்ஷனில் மிரள வைத்தவர் விஜயசாந்தி. 90 லட்ச பட்ஜெட்டில் தயாரான இந்த படம் அப்போதே 7 கோடி ரூபாய் வசூல் செய்தது. தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற விஜயசாந்திக்கு வைஜெயந்தி ஐபிஎஸ் சார்பில் ஒரு சல்யூட்.

Advertisement