என்னய்யா காசு,காசு அட போங்கய்யா – கேப்டனின் பழைய வீடியோவை கண்டு கதறி அழுத அவரின் மகன்.

0
438
- Advertisement -

நினைவேந்தல் கூட்டத்தில் விஜயகாந்தை நினைத்து அவருடைய மகன் கதறி அழுது இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம்:

மேலும், தமிழகத்தில் பல இடங்களில் கேப்டன் விஜயகாந்தினுடைய புகழ், நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.

தேம்பி அழுத விஜயகாந்த் மகன்:

அதில் விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது. அப்போது, என்னையா காசு காசு காசு, போகும் போது என்னய்யா எடுத்துட்டு போ போறோம் என்று விஜயகாந்த் பேசிய வசனம் வந்திருந்தது. இதைக் கேட்டவுடன் அவருடைய மகன் விஜயபிரபாகரன் தேம்பித் தேம்பி அழுந்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜயபிரபாகரன் பேச்சு :

இதனை அடுத்து விஜயகாந்த்திற்கு நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், இந்த விழாவில் பேசிய விஜயபிரபாகரன் ‘ கேப்டன் நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனேதான் இருக்கிறார்.நடிகர் சங்கம் நடத்திய எந்த நிகழ்விலும் நானோ எனது சகோதரர் சண்முகபாண்டியனோ கலந்துகொண்டதில்லை.

அப்பா கனவை நிறைவேற்றுவோம் :

இதுதான் முதல் நிகழ்வு. முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான்.எங்க அப்பா உங்களுகாக எங்களை விட்டுட்டு போயிருக்கார். அப்பா கனவை நிறைவேற்றத்தான் நானும் சண்முகபாண்டியனும் இருக்கோம். எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் தெரிஞ்ச 2024 ரெசல்யூசனை இந்த வருடத்தில் உங்களுக்குச் சமர்ப்பணம் பண்ணுவோம்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement