எல்லை தாண்டிய காதல்’ மகன் இருக்கும் நிலையில் கைவிட்ட கணவர். இந்திய வீராங்கனை சானியா மிர்ஸாவை கைவிட்டு பாக்கிஸ்தான் நடிகையை திருமணம் செய்த சோயிப் மாலிக்.

0
682
- Advertisement -

சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்யப்போவது அடிக்கடி செய்திகள் வெளியான நிலையில் தற்போது சோயப் மாலிக் இரண்டாம் திருமணத்தையே முடித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். தனது ஆறு வயதிலேயே டென்னிஸ் விளையாட்டை பயின்றவர் சானியா மிர்சா. பின் இவர் டென்னிஸ் விளையாட்டில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்று இருக்கிறார். பின் இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து இருந்தார்கள்.

- Advertisement -

சானியா மிர்சா- சோயப் மாலிக் விவாகரத்து:

கடந்த 2018 ஆண்டு சானியா மிர்சாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டினர். இவர்கள் இருவரும் தன் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது.

இது குறித்து பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் கூறியபோது , இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று இருக்கின்றனர். சானியா மிர்சா இந்தியாவில் தான் வசித்து வருகிறார். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்தச் செய்திக்கு இருவருமே பதிலளிக்கவில்லை.

-விளம்பரம்-

சானியா மிர்ஸாவின் சூசக பதிவு :

கடந்த ஆண்டு இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினர். அப்போது கூட மூன்று பேரும் சேர்ந்து புகைப்படங்களை வெளியிடவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் சோயப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிட்டு இருந்ததை மாற்றி அமைத்தார்.சமீபத்தில் சானியா மிர்சா சோசியல் மீடியாவில் புதிய பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.

இரண்டாம் திருமணம் :

அது அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது போல இருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக சோயப் மாலிக், சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை சனா ஜாவேத்தும் திருமணப் புகைப்படங்களைத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement