தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு பெண் இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது, திரைப்பட தேசிய விருது உட்பட பல விருதுகளை விஜயசாந்தி வாங்கியுள்ளார்.

மேலும், நடிகை விஜயசாந்தி அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். பின் இவர் 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். இப்படி இவர் பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார்.

Advertisement

வைஜெயந்தி ஐபிஎஸ் :

1990ல் தெலுங்கில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் கர்த்தவ்யம். இதன் மூலம் தான் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. இந்த திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியானது. தமிழிலும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி நேர்மையாக இருப்பதால் தன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டங்களையும் பின்னர் அதிலிருந்து மீண்டு எதிரிகளை அழிப்பதையும் மையமாக கொண்ட கதை. படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்திருந்தார்.

சினிமாவின் கோணத்தை மாற்றியவர்:

இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விஜயசாந்திக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகில் கதாநாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஒரு சில பாடல்கள் பாடல் காட்சிகளுக்கு மட்டும் கதாநாயகிகள் தேவைப்படும் பிம்பத்தை உடைத்தெரிந்து ஆண்களுக்கு நிகராக மிரட்டி இருந்தவர். மேலும், விஜயசாந்தி போலீஸ் அதிகாரியாக சண்டை போடும் ஸ்டைல், வசன உச்சரிப்பிலும் போலீஸ் அதிகாரிக்கு இருக்கும் குணமும் பிரம்மிக்க வைத்தது.

Advertisement

வாங்கிய முதல் சம்பளம் :

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டி கொடுத்துள்ள விஜய சாந்தி கூறியதாவது “நான் பல மொழிகளில் 180 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறேன். முக்கியமாக எனக்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதே பிடிக்கும் என்று கூறிய அவர் தான் வாங்கிய முதல் சம்பளம் சினிமாவில் 5000 ரூபாய் என்றும் ஆனால் படம் முடிந்தவுடன் 3000 கொடுத்து ஏமாற்றி விட்டார்கள், பின்னர் அந்த 3000 ரூபாயில் இருந்து ஆரம்பித்து பல கோடிகளாக என்னுடைய சம்பளம் உயர்ந்தது.

Advertisement

அதிக சம்பளம் வாங்கும் வரிசையில் இருந்தேன் :

அந்த சினிமா காலத்தில் இந்தியாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் போன்றவர்களுடன் என்னுடைய பெயரும் இருந்து. இதனை நான் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன் என்று கூறினார். கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான “மன்னன்” படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக அதே நேரத்தில் ரஜினிகாந்திற்கு இணையான நடிப்பை விஜயசாந்தி கொடுத்து அசத்தியிருப்பார்.

Advertisement