இதனால் தான் நான் குழந்தை பெத்துக்க கூடாது என்று முடிவு எடுத்தேன் – நடிகை விஜயசாந்தி ஓபன் டாக்

0
282
- Advertisement -

குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கான காரணம் குறித்து மனம் திறந்து நடிகை விஜயசாந்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்தவர் விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகை இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை இருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு பல விருதுகளை விஜயசாந்தி வாங்கி இருக்கிறார். மேலும், இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். பின் இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் அதிமுக கட்சிக்கு நட்சத்திர பேச்சாளராக இருந்தார்.

- Advertisement -

விஜயசாந்தி குறித்த தகவல்:

அதற்கு பின் 1998 ஆம் ஆண்டு இவர் பாஜகவில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் இவர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் இவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். இப்படி இவர் பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார்.

விஜயசாந்தி திரைப்பயணம்:

இதனால் நடிகை விஜயசாந்தி அவர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை விஜயசாந்தி அவர்கள் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கான காரணம் குறித்து விஜயசாந்தி கூறியிருப்பது,
குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது.

-விளம்பரம்-

விஜயசாந்தி பேட்டி:

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். காரணம், அது பெண்ணுக்கு ரொம்ப முக்கியமான விஷயம். ஒரு பெண் தன்னை தாயாக மாற்றிக் கொள்ளும்போது ரொம்ப அழகாக இருக்கும். எனக்கு குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். ஒரு கட்டத்தில் அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். காரணம், நான் அரசியலில் இருந்தால் தான். எங்கேயோ ஒரு இடத்தில் எனக்கு குழந்தைகள் இருந்தால் தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் செய்வார்கள் என்று எனக்கு சந்தேகம் வந்தது.

குழந்தை குறித்து சொன்னது:

காரணம், அந்த சமயத்தில் நடந்தது சாதாரண விஷயம் கிடையாது. அப்போது இருந்த சூழ்நிலை வேறு. பொது வாழ்க்கையில் ஒரு விஷயத்துக்காக நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது எது வேணாலும் நடக்கலாம் என்று தோன்றியது. ஆண்களுக்கு அது ஓகே என்றாலும் பெண்களுக்கு கொஞ்சம் கடினமான விஷயம் தான். நான் யோசித்து தான் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தேன். மக்கள் தான் என்னுடைய குழந்தை. அப்படி நினைத்து தான் நான் வாழ ஆரம்பித்தேன். இந்த விஷயத்தை பற்றி என்னுடைய கணவரிடம் சொல்லும் போதும் அவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement