தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகை இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை இருக்கிறார்.

இவரின் நடிப்பு திறமைக்கு பல விருதுகளை விஜயசாந்தி வாங்கி இருக்கிறார். மேலும், இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். பின் இவர் 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் இவர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் இவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். இப்படி இவர் பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார்.
விஜயசாந்தி குறித்த தகவல்:
இதனால் நடிகை விஜயசாந்தி அவர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை விஜயசாந்தி அவர்கள் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயசாந்தி, என்னுடைய வீட்டில் ரொம்பவே கண்டிப்பு. ஸ்கூல், வீடு, டான்ஸ் கிளாஸ் என்று என்னுடைய வாழ்க்கை இருந்தது.

விஜயசாந்தி பேட்டி:
மிலிட்டரி மாறி என்னுடைய வீடு இருந்தது. வெளியில் விளையாடுவது, சினிமா என்றெல்லாம் எதுவும் கிடையாது. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு தான். என் மீது பாசம் அதிகமாக இருந்தாலுமே பொத்தி பொத்தி தான் வளர்த்தார்கள். வெளியில் சுதந்திரமாக விளையாடலாம் போக முடியாது. ஆனால், இதெல்லாம் தான் என்னுடைய வாழ்க்கைக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. எனக்கு சின்ன வயசுல சிவாஜி,எம்ஜிஆர் சார் படங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். என்னுடைய அப்பா முதலில் சினிமாவை பார்த்துட்டு நன்றாக இருந்தால் மட்டும் தான் அந்த படங்களுக்கு என்னை கூட்டிட்டு போவார்.
சினிமா வாய்ப்பு:
எனக்கு 13, 14 வயதிலேயே சினிமா வாய்ப்பு வந்தது. சினிமாவில் நான் மிகப்பெரிய ஸ்டாராக வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் நடிக்கலாம் என்ற ஆர்வம் இல்லை. ஸ்டுடியோ ஒன்றில் அப்பா என்னை வைத்து ஃபோட்டோ எடுத்தார். அந்த போட்டோ பாரதிராஜா கையில் சிக்கியது. உடனே அவர், நான் நடிக்க என்னுடைய அப்பாவிடம் கேட்டார். என் வீட்டிலும் ஒத்துக் கொண்டு தான் சினிமாவுக்குள் வந்தேன். கல்லுக்குள் ஈரம் படத்தில் நடித்த போது பாரதிராஜா கோபப்பட்டு என் கன்னத்திலேயே அடித்து விட்டார். அந்த சமயம் என் மீது எந்த தவறும் இல்லை. ஆனால், அவர் என்னை அடித்தார்.
https://www.youtube.com/watch?v=5gEFS6CDMuo
வாழ்க்கை குறித்து சொன்னது:
இதனால் எனக்கு பயங்கர கோபம் வந்து நடிக்க முடியாது என்று கிளம்பி விட்டேன். உடனே கேமராமேன் நிவாஸ் சார் தான் அழக்கூடாது என்று சமாதானப்படுத்தி என்னை மீண்டும் நடிக்க வைத்தார். பாரதிராஜா சாரும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதற்கு பிறகு நான் நடித்தேன். அப்போ எனக்கு ஒரு வருடத்திற்கு 17 படங்கள் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளைக்கு ஆறு ஷிப்ட் இருக்கும். காரிலேயே தான் மேக் அப், ஹேர் ஸ்டைல் எல்லாம் செய்ய வேண்டி இருக்கும். இடைவெளியில் அங்கேயே டவல் ஒன்றை விரித்து தூங்கி விடுவேன். ஷாட் வந்ததுமே தயாராகி கிளம்புவேன். இப்படிதான் பல வருடங்கள் நான் சினிமாவில் இருந்தேன். அதனால் தான் என்னால் 190 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது என்று பல விஷயங்களை மனம் திறந்து கூறியிருக்கிறார்.






