இதுகுறித்து சமீபத்தில் தே மு தி க சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் உடல் நலம் குறித்து வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஜயகாந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சீரியசாக இருக்கிறார் என்று சில செய்திகள் பரவி வருகிறது. அதை யாரும் நம்பாதீங்க. அவர் ராஜா மாதிரி வீட்ல இருக்காரு.
https://youtu.be/XVKipMB7xy8
தேவையில்லாத வதந்திகளை சிலர் பரபரங்க. அவங்களுக்கெல்லாம் என்ன வேணுன்னு எனக்கு தெரியல. அப்பா, நலமாக இருக்கிறார், நீங்க எப்படி அவர் வரணும்னு எதிர்பார்க்கிறீங்களோ அத விட 100 மடங்கு நலமாக திரும்பி வருவார். அவர் இன்னும் நாலு மாசத்துல அடுத்த கட்ட சிகிச்சைக்கு வெளிநாடு போக இருக்கார். அதுனால அவர் சீக்கிரம் குணமடைந்து விடுவார். அதுக்கப்புறம் அவர் எப்படி வரார்னு பாருங்க என்று தெரிவித்திருக்குகிறார் விஜய் பிரபாகரன்.சினிமாReading time · 1 min





