இதை சாப்பிட்டாலே கண்ணு மின்னும், ஐஸ்வர்யா ராய் கண்ண பார்த்திருக்கீங்களா – பா.ஜ.க அமைச்சர் பேச்சு.

0
1329
- Advertisement -

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கண்கள் ஜொலிப்பதற்கு இதுதான் காரணம் என்று பாஜக அமைச்சர் விஜயகுமார் காவித் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு மகாஷ்டிராவின் பழங்குடியின தலைவராக பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் விஜயகுமார் காவித் இருக்கிறார். தற்போது இவர் நந்துர்பர் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இது துலே மாவட்டத்தில் மீனவர்கள் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விழா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விழாவில் அமைச்சர் விஜயகுமார் காவித் பேசியது, நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது ரொம்ப அழகாக இருக்கும். அவர் கர்நாடகாவின் மங்களூரு கடற்படை பகுதியில் வளர்ந்தவர். அவர் தினமும் மீன் சாப்பிட்டார். அதனால்தான் அவருடைய கண்கள் அழகாக இருக்கிறது. தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் சருமம், மென்மையாகவும் கண்ணும் ஒளிரும்.

- Advertisement -

விஜயகுமார் காவித் கருத்து:

உங்களுக்கு அவரைப் போன்று கண்கள் வேண்டுமென்றால் உணவில் தினமும் மீனை எடுத்துக் கொள்ளுங்கள். மீன்னில் ஒரு வகை எண்ணெய் இருக்கிறது. அது தோலை மென்மையாக்குறது. மீன் சாப்பிடுவதால் உடல் அமைப்பு மிகவும் மெல்லியதாக இருக்கும் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அந்த வகையில் பாஜக எம்எல்ஏ நித்திஷ் ராணே, நான் தினமும் மீன் சாப்பிடுகிறேன். என் கண்கள் ஐஸ்வர்யா ராய் உடையதை போல ஆக வேண்டும். இதைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி இருந்தால் நான் காவித் சாஹிபிடம் கேட்பேன் என்று விமர்சித்து பேசுகிறார். இன்னும் சிலர், பழங்குடியினர் தினமும் சந்திக்கும் பிரச்சினைகளில் காவித் கவனம் செலுத்தி வந்தால் நாடு முன்னேறும் என்றெல்லாம் அறிவுரை கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல் :

என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவில் பிறந்தவர். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

ஐஸ்வர்யா ராய் நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகம் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement