‘பர்ஸ்ட் பாட்டே இப்போ தான் ரெடி பண்றீங்களா’ போனில் பேசிய விஐய். இதோ பீஸ்ட் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (டாக்டர் மாதிரி ட்ரை பண்ணிருக்காங்க)

0
434
beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அந்த அளவிற்கு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அது வேறு ஒன்றில் இல்லை ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய தகவல் தான். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதுகுறித்த தகவல்கள் இத்தனை நாட்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் பாடல் எழுதியிருப்பதை உறுதி செய்திருக்கிறார். படக்குழுவே அறிவிக்கும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற ‘செல்லமா செல்லமா’ பாடலும் ‘ஓ பேபி’ பாடலும் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார். மேலும், அந்த பாடலை வெளியாகும் முன்னர் இதே போல ஒரு சின்ன ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டாக்டர் பணியை தொடரும் நெல்சன் :

தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் முதல் பாடலுக்கும் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கில்லி படத்தின் பாடல் ஒன்று பீஸ்ட் படத்தில் வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் அவர்கள் ரீமேக் செய்து பாடல்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர். அதே போல் நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார். மாஸ்டர் படத்தில் அனிருத் இசை அமைப்பாளராக இருந்தார்.

-விளம்பரம்-

மாஸ்டரில் ஹிட் அடித்த தீம் :

அதில் கில்லி படத்தில் வந்த கபடி கபடி என்ற பாடலை மாஸ்டர் படத்தின் ஒரு காட்சிக்கு ரீமேக் செய்து வைத்திருந்தார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்துடைய பாடலை கொஞ்சம் ரீமேக் செய்து வைத்திருந்தார். அந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

This image has an empty alt attribute; its file name is 1-98.jpg

பீஸ்ட் படத்தில் கில்லி ரீ – மேக் :

தற்போது பீஸ்ட் படத்தில் அர்ஜுனரு வில்லு பாடல் இடம் பெற்று இருக்கிறது. விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று கில்லி. இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கி இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் கில்லி படத்தில் வந்த ‘அர்ஜுனரு வில்லு’ என்ற பாடல் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement