கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்பியது. இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் . ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகி இருந்தது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்து இருந்தார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பிகில் படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன் என்ற ஒரு லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் இயக்குனர் அட்லி இடம் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து கதை எடுப்பீர்களா! என்று கூட கேட்டு இருந்தர்கள். இந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தியிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் பிகில் படத்தை ரிலீஸுக்கு முன்னாடி பார்த்தப்போ விஜய் உங்ககிட்ட என்ன சொன்னார் என்று கேட்க்கப்பட்டது. அதற்கு அர்ச்சனா கல்பாத்தி கூறியது, பிகில் படம் பார்த்ததும் விஜய் சாருக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே `ராயப்பன்’ கேரக்டர் ரொம்பப் பிடித்து விட்டது. ஏன்னா, அட்லி கதை சொல்லும்போது யாருமே விஜய் சாரை இந்த கேரக்டருக்கில் மைண்ட்டில் வைத்து கேட்கவில்லை.
இதையும் பாருங்க : திருமண விஷயத்தில் மூக்கை நுழைத்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்த பதிலடி.
முதலில் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சாரை யோசிக்கவில்லை. எதாவது ஒரு சீனியர் நடிகரை வைத்து நடிக்க வைக்கலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், யாரும் அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை. இதுக்கு நடுவில் தான் மைக்கேல் கேரக்டருக்கு விஜய் சாருக்கான லுக் டெஸ்ட் எடுத்துட்டு இருந்தோம். இதுக்கு ப்ரீத்தி ஶ்ரீ- என்ற ஒரு காஸ்மெட்டாலஜிஸ்ட் மும்பையில் இருந்து வந்திருந்தார்கள். அவங்கதான் `Chhichhore’ படத்தில் சுஷாந்த் சிங் பண்ண ரெண்டு லுக்கையும் பத்தி சொன்னார்கள்.
அப்பதான் ஹிந்தியில் சுஷாந்த் சிங் மாதிரியே ஏன் விஜய் சாரும் ரெண்டு ரோல்லில் நடிக்கக்கூடாது என்று தோணியது. உடனே, விஜய் சார்கிட்ட சொல்லி ராயப்பன் லுக் டெஸ்ட்டும் எடுத்தோம். டெஸ்டிலேயே வேற லெவல் வந்தது. விஜய் சாரும் இதுவரை வயசான கெட்டப்பில் நடித்தது இல்லை என்றதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராயப்பனைப் பார்த்ததும் எல்லோருக்கும் புல்லரித்து போய் விடும். படம் பார்த்து முடிச்சவுடனே இதை பற்றித்தான் விஜய் சார் பேசினார் என்று அர்ச்சனா கூறினார்.