என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனத்தை கேட்டதும் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலக்கப்போவது யாரு ராமர் தான் ஆனால் இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் என்றால் அது லட்சுமி ராமகிருஷ்ணன் தான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் நடிகை என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல்வேறு குடும்ப பிரச்சனைகளுக்கு நாட்டாமை செய்த இவர் சமீபத்தில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து இருந்தார் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
https://twitter.com/vanithavijayku1/status/1277492498676342785
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதா சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவர் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். மேலும், பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் பீட்டரை திருமணம் செய்த பின்னர் பீட்டரின் மனைவி தனக்கு விவாகரத்து கொடுக்காமல் எப்படி என் கணவரை வனிதா திருமணம் செய்து கொள்ளலாம் என்று காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
இதையும் பாருங்க : ப்ரண்ட்ஸ் படத்தில் வந்த குட்டி விஜயா இது, அவர் ஹீரோவாக நடித்த குறும்படத்தை பார்த்துள்ளீர்களா ?
இது ஒருபுறம் இருக்க வனிதாவின் திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார் அதில்,இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் இப்படி ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
https://twitter.com/vanithavijayku1/status/1277336639325401088
இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, கற்பழிப்பு மற்றும் தற்கொலை குறித்து பேசி உங்களின் உண்மையான கடமைகளைச் செய்யுங்கள் ஒரு குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் குடும்பத்தை பற்றி விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா உங்க வாய கொஞ்சம் மூடு மேடம் என்றும் பதிலளித்துள்ளார் வனிதா.




