விஜயின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மனைவியை விமர்சித்து நெட்டிசன்கள் பதிவிடும் கமெண்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வாரிசு.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். குடும்பப் பின்னணியை மையமாக கொண்ட இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகிருந்தது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றிருக்கிறது. இதனை அடுத்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் மாதம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயின் உறவினரும் தயாரிப்பாளருமான ப்ரிட்டோவின் மனைவி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயின் மாமா சேவியர் பிரிட்டோ. இவர் தயாரிப்பாளர் ஆவார். குறிப்பாக, விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார்.
View this post on Instagram
இவர் பிரபலமானதே மாஸ்டர் படத்தின் போது தான். அதற்குப் பிறகு இவருடைய நிறுவனங்களிலும், அலுவலகங்கள் வீடுகளில் வரிமான வரி சோதனை நடத்தி இருந்தார்கள். இதனால் தான் விஜய் வீட்டிலும் ரெய்டு நடந்ததாக கூறப்பட்டது. மேலும், சேவியர் பிரிட்டோவின் மனைவி விமலா ராணி பிரிட்டோ. இவர் தான் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எங்கள் வீட்டில் 37 வருடமாக ஒருத்தர் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்று சொன்னதும் தொகுப்பாளருக்கு ஆச்சரியம் வந்துவிட்டது.
உடனே அவர் அந்த டிரைவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பின் அந்த டிரைவர், ஆமாம் நான் 37 வருடமாக இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். முதலில் நான் வாங்கிய சம்பளம் 600 ரூபாய். இப்போது நான் 29 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிறேன் என்று சொன்னார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலருமே, இது ரொம்ப கம்மியான சம்பளம்.

37 வருடங்களாக ஒருத்தர் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இவ்வளவு குறைவாகவாக சம்பளம் தருவதா? இப்ப இருக்கும் காலகட்டத்தில் இந்த சம்பளம் எல்லாம் குறைவு. வருடத்திற்கு ஆயிரம் இன்கிரிமென்ட் போட்டால் கூட 30 வருடத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வந்திருக்கும். இதெல்லாம் தவறான செயல் என்று பலரும் விஜயின் மாமா சேவியர் பிரிட்டோ மற்றும் விமலா பிரிட்டோவை விமர்சித்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். ஆனால்,அவர் அந்த டிரைவரின் மகன்களை படிக்க வைப்பது விமலா மேடம் தான் என்பதை கவனிக்க மறந்துவிட்டனர்.






