ஜெயிலர் சாதனையை முறியடிக்க லியோ படக்குழுவின் திட்டம் என்ன தெரியுமா ? இது நடக்குமா ?

0
2027
- Advertisement -

ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை விஜய்யின் லியோ படம் முறியடிக்க படக்குழு எடுத்து இருக்கும் அதிரடி முடிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களின் முதல் நாள் வசூலின் சாதனையை ரஜினியின் ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது.

படத்தின் வசூல்:

இந்தியா முழுவதும் இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சுதந்திர தினத்தன்று மட்டும் ஜெயிலர் படம் நாடு முழுவதும் 33 கோடி வசூல் செய்திருக்கிறது. கேரளாவில் இதுவரை 30 கோடி வரை வசூலித்து இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஜெயலலிர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 375 கோடி அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் சாதனையை விஜயின் லியோ படம் முறியடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

லியோ படக்குழு திட்டம்:

அதாவது, விஜயின் லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை முறியடிக்கும் வகையில் திரையரங்களில் வெளியிடப் பட குழு முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் ஜெயிலர் படம் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகியிருக்கிறது. இதை முறியடிக்கும் அளவிற்கு லியோவை வெளியிடப் பட குழு திட்டமிட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் லியோ படத்தினுடைய வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் யார் என்று சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை:

இது கடந்த ஆண்டிலிருந்தே ஒரு விவாத பொருளாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய நடிகர் தான் சூப்பர் என்று விவாதத்தில் ஈடுபட்டனர். பல விதமான மீம்ஸ்களை போட்டு ஒருவரை ஒருவர் கலாய்த்தும் வருக்கின்றனர். மேலும், சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல், ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது. தற்போது விஜய்-ரஜினி ரசிகர்கள் மத்தியில் பனிப்போரே நடந்து இருக்கிறது. அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ படம் முறியடிக்க இருக்கும் தகவல் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement