15000 இருந்தா தான் உன் குடும்பம் ஓடும், என்ன மாதிரி நீங்க 50000 எதிர் பாக்காதீங்க – தனது மாணவர்களுக்கு சந்தோஷி கொடுத்த அட்வைஸ்.

0
242
- Advertisement -

சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று மீண்டும் சின்னத் திரையிலேயே பயணம் செய்த நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர் . நாடக நடிகை பூர்ணிமாவின் மகள் தான் நடிகை சந்தோஷி. இவர் தன்னுடைய எட்டு வயது இருக்கும் போதே தன்னுடைய அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும், இவர் பாபா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து நடிகை சந்தோஷி பாலா, மாறன், ஆசை ஆசையாய், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் என பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

சந்தோஷி திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் என இரு மொழி படங்களில் கூட நடித்து உள்ளார். இவர் சன் டிவியில் ஓளிபரப்பான வாழ்க்கை என்ற சீரியலின் மூலம் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புதிரி, வாடகை வீடு, இல்லத்தரசி, மரகத வீணை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, நம்பர் 23 ,மகாலட்சுமி என பல தொடர்களில் நடித்து உள்ளார்.

அதன் பின் நடிகை சந்தோஷி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆனார். இவர் நிறைய பியூட்டி(அழகு) போட்டிகள் கூட செய்கிறார். மேலும், இவர் பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு அழகு செய்வதை தன் முழு நேர வேலையாக செய்வதை வைத்து உள்ளார். தற்போது பிரபலமான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக சந்தோஷி இருக்கிறார். இந்நிலையில் மேக்கப் ஆர்டிஸ்ட் சந்தோஷி ஸ்ரீகர் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சந்தோஷி ஸ்ரீகர் பேட்டி:

அதில் அவர், நான் ஒரு மேக்கப்க்கு 50,000 வாங்குவேன். அப்படி இல்லை என்றாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு சொத்து இருக்கு பார்த்துக் கொள்வேன். ஆனால், நீங்கள் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள். ஒரு மேக்கப்பிற்கு ஆயிரம் 15 பேருக்கு உழைத்தால் தான் 15,000 கிடைக்கும். அதனால் 50 ஆயிரம் சம்பாதிப்பவர்களை பற்றி யோசிக்காமல் உங்கள் பற்றி யோசியுங்கள்.

சந்தோஷி சொன்ன அறிவுரை:

பணத்திற்காக வேலை செய்யாதீர்கள் . உங்கள் கான்ஃபிடன்ட், தன்னம்பிக்கை, உழைப்பிற்காக செய்யுங்கள். கான்ஃபிடன்ட் வந்தாலே டிமாண்ட், சம்பளம் அதிகமாகும். இதைத்தான் நான் என்னுடைய மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறேன். நயன்தாரா முதல் படத்தில் நடிக்கும் போது எவ்வளவு சம்பளம் வாங்கினார்? இப்போது எவ்வளவு வாங்குகிறார் அனைவருக்கும் தெரியும். அவர் ஆரம்பத்தில் வாங்கின சம்பளத்தை இப்போது வாங்க முடியுமா? காரணம் அவருக்கு இருக்கும் டிமாண்ட் தான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வார்கள். அதை தான் நான் என்னுடைய மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement