சர்வேதச விளையாட்டு போட்டியில் பட்டம் வென்ற வீரர் – விஜய் பட போஸ்டரை பயன்படுத்தி வாழ்த்து சொன்ன விம்பிள்டன் நிர்வாகம்.

0
1684
Vijay
- Advertisement -

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட லுக்கில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அல்கராசின் புகைப்படத்தை விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டென்னிஸ் விளையாட்டில் மிகவும் பிரபலமான ஒரு போட்டியாக கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டி தான். அந்த வகையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் 2023ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சமீபத்தில் நடைபெற்று வந்தது.

-விளம்பரம்-

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 2ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் உலகின் 8ம் நிலை வீரரான ஜானிக் சின்னரைத் வீழ்த்தி 9வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும், 35வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.36 வயதான நோவக் ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் இறுதிப் போட்டியை எட்டிய சாதனையை முறியடித்தார்.

- Advertisement -

இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் (34) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கிறிஸ் எவர்ட் சாதனையை முறியடித்தார். இதுபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்ள இருந்தார்.

உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான டேனியல் மெட்வடேவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.20 வயதான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் 6-3, 6-3, 6-3 என்ற கணக்கில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.இந்த நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

-விளம்பரம்-

விம்பிள்டன் டென்னிஸ் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதினர். விம்பிள்டனில் கார்லோஸ் அல்கராஸ், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாட விரும்புவதாக பலமுறை தெரிவித்திருந்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட லுக்கில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அல்கராசின் புகைப்படத்தை விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement