18 ஆண்டுகள் கழித்து புகார். ரியல் மஞ்சும்மேல் பாய்ஸை தாக்கிய போலீஸார் பற்றி விசாரணை – தமிழக அரசு நடவடிக்கை

0
104
Manjummel
- Advertisement -

மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படத்தில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள்.

-விளம்பரம்-

அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பது படத்தின் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். மேலும், படத்தில் குழிக்குள் விழுந்த தன்னுடைய நண்பரை காப்பாற்ற இளைஞர்கள் உதவி கேட்டு கொடைக்கானல் காவல் நிலையத்தில் செல்வார்கள். ஆனால், போலீஸ் அவர்களை அடித்தும், உதவி செய்யாமல் இருப்பது போல காண்பித்து இருப்பார்கள்.

- Advertisement -

போலீஸ் செய்த கொடுமை:

உண்மையிலேயே அந்த மாதிரி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இதை படம் வெளியான பிறகு ரியல் மஞ்சுமெல் பாய்ஸ் கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேரள மாநிலம் சேர்ந்த ரியல் மஞ்சுமெல் பாய்ஸ் ஷிஜு ஆபிரஹாம் என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தமிழக உள்துறை செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் பெயரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் மாநில டிஜிபி கடிதம் எழுதி இருக்கிறார்.

ஷிஜு ஆபிரஹாம் அளித்த புகார்:

இது குறித்து ரியல் மஞ்சுமெல் பாய்ஸ் சிஜு (மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குட்டன்) கூறியிருப்பது, அன்று இந்த சம்பவத்தின் போது எங்கள் குழுவில் இருந்தவர்களை போலீஸ் அடித்தது உண்மைதான். எங்களில் சிலர் உதவி கேட்டு காவல் நிலையத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், போலீஸ் எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். இந்த படம் வெளிவந்த பிறகு நாங்கள் குணா குகைக்கு சென்றிருந்தோம். அப்போது காவல்துறை அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் எங்களிடம் வந்து அன்றைய சம்பவத்தை பற்றி பேசி மன்னிப்பு கேட்டார்கள். பல கொலைகள் அந்த பகுதியில் நடந்திருந்ததினால் தான் உங்களிடமும் அப்படி நாங்கள் நடந்து கொண்டோம் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

ரியல் மஞ்சுமோல் பாய்ஸ் சொன்னது:

இந்த சம்பவம் நடந்து 18 வருடம் ஆனது. அதில் பலருக்கும் வயதாகிவிட்டது. இனி நாங்கள் அந்த சம்பவத்தை பற்றி புகார் கொடுத்து யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து புகார் கொடுத்த ஷிஜு ஆபிரஹாம், போலீசார் கடுமையாக நடந்து கொண்டது என்னை ரொம்பவே பாதித்தது. இது குறித்து இயக்குனர் இடமும் சொன்னோம். அவர்கள் உண்மையாகவே போலீசில் நாங்கள் அனுபவித்த கொடுமைகளில் பத்து சதவீதம் கூட படத்தில் காண்பிக்கவில்லை. இதனால்தான் நான் அநீதியை தட்டிக் கேட்க வேண்டும் என்று புகார் அளித்தேன்.

சிஜு

புகார் அளித்த காரணம்:

உண்மையிலேயே மஞ்சுமோல் பாய்ஸ் குழுவினருக்கு இதைப் பற்றி புகார் அளிக்க விருப்பமில்லை. அவர்கள் அப்போதே ரொம்ப பயந்திருந்தார்கள். இப்போது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நான் அவர்களுக்காக இந்த புகாரை கொடுக்கவில்லை. இனி யாருக்கும் இப்படி நடக்க கூடாது என்பதற்காக தான் இந்த புகாரை அளிக்கிறேன். காவல் நிலையத்திற்கு யாராவது உதவி கேட்டு வந்தால் அவர்களிடம் காவலர்கள் இப்படி கடுமையாக நடக்க கூடாது. இந்த சம்பவம் 18 வருடத்திற்கு பிறகும் தாங்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்று பயம் இருந்தால் மக்களிடம் சரியாக நடந்து கொள்வார்கள். அதனால் தான் நான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த புகாரை அளித்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement