நாளை வெளியாகப்போகும் ‘மாஸ்டர்’ படத்தின் குட்டிக் கதை இதுதானா ?

0
7395
master

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம்,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

oru kutti katha

- Advertisement -

இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வேற லெவல்ல அதிர வைத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவர உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதற்கு ஒரு குட்டி கதை என்றும் டைட்டில் வைத்தனர். பொதுவாக விஜய் அவரது படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அதே வரிகளில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
vijay and anirudh

குட்டி கதை பாடல், தான் `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாகஇருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பு ஷிமோகா சிறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனினில் இந்த படத்தில் விஜய் ஒரு ஜெயில் பாதுகாவலராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. `பிகில்’ படத்தின் `வெறித்தனம்’ பாடலைப் போல, `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலையும் விஜய்யே பாடியிருக்கிறார். அதே போல அனிருத் இசையில் ஏற்கனவே விஜய் ‘செல்ஃபீ புள்ள பாடலை பாடி இருந்தார் ‘`ஒரு குட்டிக் கதை’ பாடல், சிறைக் காவலர் விஜய்க்கு ஓப்பனிங் பாடலாக இருப்பதைப் போல, ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆரம்பிக்கும்போது கல்லூரிப் பேராசிரியர் விஜய்க்கும் ஒரு ஓப்பனிங் பாடல்இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement