தளபதியா? தலையா ? மாஸ் காட்ட போவது யாருனு காத்திருந்து பாக்கலாம்.

0
2378
Dhoni-vijay
- Advertisement -

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியை தான். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

Image result for viay and dhoni

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார்.

இதையும் பாருங்க : என்னுடைய மகனை வைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார்கள். ஷாக் கொடுத்த சன் டிவி மோனிகா.

-விளம்பரம்-

இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று ஒரு குட்டி கதை என்ற டைட்டில் உடன் வெளியாகியது. வழக்கம் போல் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார். தற்போது இந்த குட்டி கதை பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், மாஸ்டர் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Image result for viay and dhoni

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படமும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன் முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கிரிக்கெட்?? படமா?? என்ற பயங்கர குழப்பத்தில் உள்ளனர். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி மாலையில் நடைபெற உள்ளதால் படத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ஒருபக்கம் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை ரசிகர்கள் சந்திக்க இருப்பதால் படத்தின் வசூல் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் தலயா? தளபதியா? என்று பல்வேறு கேள்விகளுடன் ரசிகர்கள் உள்ளனர். இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement