தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார்.

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய்யின் விளம்பரம்

இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் ‘தளபதி’ விஜய் பற்றி பேசுகையில் “நான் விஜய்யுடன் சில விளம்பர படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். விஜய் எப்பவும் ரொம்ப பேசவே மாட்டார், அவர் உட்கார்ந்த இடத்தில் இருக்கும் தரையை பார்த்தபடி தான் இருப்பார். நடன இயக்குநர், விஜய் முன்பு டான்ஸ் ஆடிக் காட்டுவார்.

அஜித்துடன் ராஜிவ் மேனன் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் )

அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கும் விஜய், பின் ஓகே பண்ணலாம் என்று எழுந்து வருவார். அந்த டான்ஸ் ஸ்டெப்பை சூப்பராக ஒரே டேக்கில் ஓகே பண்ணி அசத்திடுவார் விஜய். அதே போல் டான்ஸ் ஆடும்போது செம்ம அழகா இருப்பார் விஜய்” என்று ராஜீவ் மேனன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

விஜயை பற்றி தற்போது அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் கூறும் போது விஜய் ஷாட்டுக்கு முன்னாடி அமைதியாக இருப்பார். ஆனால், டேக் சொன்னதும் ஒரே ஷாட்டில் ஆடி முடித்துவிடுவார் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளனர்.ஆனால், ராஜீவ் மேனன் கூறியதை பார்க்கும் போது விஜய் அப்போதே சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் தான் என்பது உறுதியாகியுள்ளது

Advertisement

.உலகமெங்கும் இப்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement