தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் 'தளபதி' விஜய். 'சர்கார்' படத்துக்கு பிறகு 'தளபதி' விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய 'பிகில்' திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், 'மாநகரம்' என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான 'கைதி'-யிலும் பதித்து சாதித்து காட்டினார்.
.உலகமெங்கும் இப்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், '144' போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. 'கொரோனா' பிரச்சனை முடிந்த பிறகு, 'மாஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





