வண்ண நிலவே பாட்டில் முகமூடி போட்டு வந்தது ரம்பாவே இல்லையாம் – இந்த ரகசியம் தெரியுமா ?

0
3180
ninai
- Advertisement -

விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ஒரு படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளி வந்திருக்கிறது. 1998-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘நினைத்தேன் வந்தாய்’.இதில் ஹீரோவாக ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார்.விஜய்-க்கு ஜோடியாக நடிகைகள் தேவயாணி, ரம்பா என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இந்த படத்தினை பிரபல இயக்குநர் கே. செல்வ பாரதி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியோடு இப்படம் வெளி வந்து 22 ஆண்டுகள் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது.முதலில் இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர் ‘நவரச நாயகன்’ கார்த்திக்கை தான் அணுகியிருக்கிறார் இயக்குநர் செல்வ பாரதி. பின், சம்பள பிரச்சனை காரணமாக கார்த்திக் இதில் நடிக்கவில்லை. அதன் பிறகு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டு வழியாக சென்ற செல்வ பாரதி, அவரிடம் இக்கதையை சொல்லி விஜய்யை நடிக்க வைக்க கேட்டு பார்ப்போம் என்று நினைத்திருக்கிறார்.

- Advertisement -

இப்படம் ‘பெல்லி சந்ததி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால், அப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி மற்றும் மகனும், நடிகருமான விஜய்-க்கு போட்டு காண்பிக்க, அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டனர். இப்படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, ஒரு முறை இயக்குநர் செல்வ பாரதி விஜய்யை தம்பி என்று அழைத்து பேசியிருக்கிறார். அப்போது விஜய் அவரை அண்ணா என்று அழைத்து பேசியதன் ஆரம்பம் தான் இன்று வரை விஜய் அண்ணா என்றே பலரையும் அழைக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ‘வண்ண நிலவே’ என்ற பாடலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை தினமும் ஒரு காஸ்டியூமில் வர சொல்லி நடிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வ பாரதி. ஒரு நாள் விஜய் ரொம்பவும் டென்ஷனாகி இயக்குநரிடம் இது பற்றி கேட்டிருக்கிறார். பின், எடிட்டிங்கில் அப்படி எடுத்ததற்கான அவுட்புட்டை பார்த்து சந்தோஷப்பட்டு பாராட்டினாராம் விஜய்.

-விளம்பரம்-

இதே பாடலில் நடிகை ரம்பாவின் முகம் காட்டப்படாமல் இருக்கும். அதன் படப்பிடிப்பின் போது, ரம்பா சிரஞ்சீவியின் தெலுங்கு படத்துக்கான ஷூட்டிங் சென்று விட்டதால், அவருடைய முகமே காட்டாமல் வேறு ஒரு நடிகையை வைத்து தான் இயக்குநர் செல்வ பாரதி ஷூட் செய்தாராம். முதலில் ரம்பாவுக்கு பதிலாக நடிகை சிம்ரன் தான் நடிப்பதாக இருந்ததாம். பின், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.

Advertisement