விஜய், சர்கார் இந்த இரண்டு பெயர்கள் மட்டும் இந்தாண்டு படைத்த சாதனை என்னென்ன தெரியுமா..!

0
909
vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய்க்கு இந்த ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு அவருக்கு பல்வேறு சிறப்பான பெருமைகள் குவிந்த வண்ணம் அமைந்துள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் செய்த பல்வேறு சாதனைகளை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த திரைப்படம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற
ஒரு விரல் புரட்சி” பாடல்இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ, “Most anticipated video of the year” என்ற சிறப்பை பெற்றுள்ளதாக பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் , இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜய் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு மட்டும் 9 வது இடத்தில் மகேஷ் பாபு இருக்கிறார். மேலும் இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் சர்கார் படமும் இரண்டாவது இடத்தில் #MeToo இயக்கமும் இடம்பெற்றுள்ளது

-விளம்பரம்-

Advertisement