தளபதி 65 பூஜையில் செம Fun செய்துள்ள தளபதி – வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.

0
14556
Vijay
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (மார்ச் 31) துவங்கி இருக்கிறது. அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சிக்காக இணைந்திருக்கிறார். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட அவர் , “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என்ற பதிவுடன், இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி என்றும், மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால், அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். எனவே, அவர் பதிவிட்ட பதிவை வைத்துப்பார்க்கும் போது ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் முதல் வாரத்திலேயே துவங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் வெளிநாட்டில் தான் படத்தின் முதல் செடயயூல் என்று கூறப்படுகிறது. அதே போல இந்த திரைப்படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement