4 கோடி கேட்டு தயாரிப்பாளர் ஞானவேல் மீது sk தொடர்ந்த வழக்கில் திடீர் திருப்பம்.

0
674
sk
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். முதலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஸ்டுடியோ கீரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்டம் “மிஸ்ட்டர்” லோக்கல். இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பெரும் தோல்வியை தழுவியது. அதோடு விமர்சன ரீதியாகவும் “மிஸ்டர் லோக்கல்” படம் பெரிய அடி வாங்கியது.

- Advertisement -

சம்பள விவகாரம் :

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு “மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க சுமார் 15 கோடி சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தனக்கு சம்பளமாக 11கோடி ரூபாய் மட்டுமே ஞானவேல் ராஜா தந்ததாகவும் மீதம் இருக்கும் 4 கோடி ரூபாயை தர மறுப்பதாகவும் நடிகர் சிவக்ரத்திகேயன் சார்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் :

அந்த மனுவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனக்கான சம்பள பாக்கியை திரும்பி செலுத்தும் வரையில் அவர் எந்த படங்களையும் தயாரிக்க முதலீடு செய்யக்கூடாது எனவும். அவர் தயாரிக்கும் திரைப்படங்களை திரையரங்குகள் மற்றும் ஓடிடி போன்றவைகளில் வெளியிடும் உரிமைகளை தடை செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுவை எதிர்த்து ஞானவேல் ராஜா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

ஞானவேல் ராஜா மனு :

தயாரிப்பாள ஞானவேல் ராஜா கொடுத்திருந்த மனுவில் “மிஸ்டர் லோக்கல்” திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயத்தினால் தான் எடுக்கப்பட்டது என்றும். அதனால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது நடிகர் சிவகார்த்திகேயன் இந்த வழக்கு தொடர்பாக எதிர் வழக்கு தொடராதது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

சமரசமாக முடிந்த வழக்கு :

அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிவகார்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக கூறினார்கள். இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வந்த “மிஸ்டர் லோக்கல்” சம்பளம் தொடர்பான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement