தளபதி 65 படத்திற்கு சிம்பு ரூட்டை பாலோ செய்யும் விஜய் – வெறும் இத்தனை நாட்களில் படத்தை முடிக்க முடிவு.

0
10011
vijay 65
- Advertisement -

தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய் நடிக்கும் தனது 65வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்ததுதமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13 தேதி வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. சமீபத்தில் இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான போதும் திரையரங்களில் 25வது நாளையும் கொண்டாடியது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தை தொடர்ந்த நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். அதுபோக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தையும் இயக்கி வருகிறார்.தளபதி 65 படத்தை நெல்சன் இயக்குனராகவும் மற்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த தகவலைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறதாம் படக்குழு.

ஏப்ரல் மாதம் படத்தின் ஷீட்டிங்கை தொடங்கி, இரண்டே மாதங்களில் முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த விஜயின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் சிம்பு, ஈஸ்வரன் படத்தை வெறும் 40 நாளில் முடித்து கொடுத்தார். இந்த நிலையில் சிம்புவை தளபதி 65 படத்தை மிகவும் குறைந்த நாட்களில் விஜய் முடிக்க திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்புகள் 4 மாதங்களில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement