விஜயின் தளபதி 69 படம் கைவிடப்பட இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், விஜய் அவர்கள் கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். காரணம், இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனால் தளபதி 69 படத்தோடு விஜய் சினிமாவுக்கு பாய் சொல்ல இருக்கிறார். இதனால் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தான் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால், திடீரென்று அந்த நிறுவனம் படத்தை தொடங்குவதில் சில பிரச்சனைகள் இருந்ததால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் இருப்பதால் விஜய் தன்னுடைய கட்சிப் பணியில் தீவிரமாக இருக்கிறார்.
தளபதி 69 படம்:
இதனால் தான் தளபதி 69 படம் கைவிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் வட்டாரத்தில் விசாரித்தபோது, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் 'கோட்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது. படத்தில் விஜயின் உடைய காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருப்பதால் சின்ன ஓய்விற்காக விஜய் வெளிநாடு சென்றிருந்தார். வரும் ஜூன் 22-ஆம் தேதி அவருடைய பிறந்த நாள் என்பதால் அதற்கு முன்பாகவே அவர் சென்னை வருவதாக கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாள் குறித்த அப்டேட்:
இது விஜயின் உடைய ஐம்பதாவது பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள், நிர்வாகிகள் சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட பல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜயின் உடைய பிறந்த நாளின் போது கோட் படத்தினுடைய டீசர் அல்லது இரண்டாவது சிங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜயின் உடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை அடுத்து தமிழக வெற்றி கழகம் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இந்த மாதம் 28-ஆம் தேதி பரிசுகளை விஜய் வழங்க இருக்கிறார்.
தளபதி 69 குறித்த தகவல்:
அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இதுவரையும் தளபதி 69 படத்தினுடைய பூஜையும், அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. லியோ படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக இருந்த ஜெகதீஷ் தான் தளபதி 69 இன் தயாரிப்பாளராக இணைவார் என்று கூறப்படுகிறது. இப்போது இருக்கும் நிலவரப்படி படம் இன்னும் டிராப் ஆகவில்லை. இன்னொரு பக்கம், தமிழக வெற்றி கழகத்தினுடைய பிரம்மாண்ட மாநாடு வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது.

கோட் படம் குறித்த தகவல்:
விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.






