ட்விட்டரில் தற்போது சர்ச்சையை ஏற்ப்டுத்திய துப்பாக்கி படத்தின் இந்த காட்சியின் வசனம் – என்ன தெரியுமா ?

0
2247
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இடையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த விஜய்க்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் துப்பாக்கி. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்று மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது இதில் துப்பாக்கி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், வித்யூத் ஜம்வால், சத்யன், மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஏ ஆர் முருகதாஸும், விஜய்யும் இணைப்பில் வெளிவந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தை பல முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அளவிற்கு இருந்தது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற 12 கன் சூட் அவுட், ஐ அம் வெயிட்டிங், கிளைமாக்ஸ் காட்சிகள் என்று பல காட்சிகள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -

அதே போல இந்த படத்தின் ஒரு காட்சியில் தீவிரவாதிக்கு உதவி செய்யும் போலீஸ் ஆபிசர் ஒருவரின் வீட்டிற்கே சென்று அவரை மிரட்டி தற்கொலை செய்ய வைப்பார் விஜய். இந்த காட்சியில் பேசும் வசனத்தில், ‘உன் பொண்டாட்டி ராத்திரி ரோட்ல ஓரமா நின்னிகிட்டு கை காட்டி கூப்பிடுவா’ என்று பேசுவார். தற்போது இந்த வசனம் தான் சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த வசனத்தை தற்போது ட்விட்டர் வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அப்போ கணவரை இழந்த பெண்கள் வழியில்லாமல் மற்றவர்களை படுக்கைக்கு அழைத்து தான் பிழைக்க வேண்டுமா முருகதாஸ் ஒரு அழிவில்லாத ஆள் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்களோ இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் உங்களுக்கு பிரச்சனையாக தெரிகிறதா பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஒரு சிறந்த படத்தை கூறி வைக்காதீர்கள் என்று புலம்பி வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement