தனது இரண்டு பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சரண்யா மோகன் – இவங்களே குழந்தை மாதிரி தான் இருகாங்க.

0
940
saranya
- Advertisement -

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு தனுஷ் நயன்தாரா, கருணாஸ், கார்த்திக் குமார் போன்ற பலர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் அதற்கு முன்னரே விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

-விளம்பரம்-

கேரளாவில் பிறந்த இவரின் சகோதரி சுகன்யா ஒரு பாரத கலைஞர் மேலும் இவரும் ஒரு நடன கலைஞர்.இவரின் நடனத்தை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இவரை ‘அணையதி பருவம்’ என்ற படத்தில் அறிமுபடுத்தினார்.மலையாளத்தில் இவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல தமிழிலும் காதலுக்கு மரியாதை, தோஸ்த் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திரிந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு இன்னமும் சின்ன பெண் போல இருப்பதால் இவருக்கு மலையாளத்திலும் சரி,தமிழிலும் சரி ஹீரோவயின் வாய்ப்பு கிட்டவில்லை. 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். மேலும், கடந்த மாதம் 2018 ஆம் ஆண்டு தான் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement