கால் மேல கால் போட்டதால் என் குடும்பத்தையே திட்னாங்க, நான் அஜித்துக்கு போன் பண்ணி சொன்னதும் – விஜயசாரதி சொன்ன உண்மை.

0
446
vijayasarathy
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனாது. அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

-விளம்பரம்-

இருப்பினும் அஜித் பங்கேற்ற பழைய பேட்டிகளின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் இன்றளவும் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளர் விஜயசாரதி, அஜித்தை பேட்டி எடுத்த வீடியோ ஒன்று சமுக வளைத்ததில் அடிக்கடி வைரலாகி வந்தது. வணக்கம் இந்த வாரம் ஊட்டியிலிருந்து, இந்த வாரம் மதுரையிலிருந்து,இந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து என்ற இந்த வார்த்தைகளை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் தற்போதும் மறந்திருக்க மாட்டார்கள்.

- Advertisement -

90ஸ் கிட்ஸ் பேவரைட் Vj :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் 90 கிட்ஸ் மத்தியில் இன்றும் மனதிலிருந்து நீங்காமல் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் கேட்ட பாடல் என்று நிகழ்ச்சியும் ஒன்று. ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியை வித்யாசமான முறையிலும் சுவாரசியமான முறையிலும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜய் சாரதி. ஊர் ஊராக சென்று அந்த ஊரில் என்ன சிறப்பு என்பதை கூறுவார்.

நீங்கள் கேட்ட பாடல் :

மேலும், அங்கு இருக்கும் ஊர் மக்களுடனும், அந்த ஊருக்கு வரும் சுற்றுல்லா பயணிகளுடனும் உரையாடி பின்னர் அவர்களுக்கு பிடித்த பாடல்களை ஒளிபரப்புவார்கள். தற்போது வேண்டுமானால் ‘இது என்ன புதுசான விஷயமா’ என்று கேட்கலாம். ஆனால். 90 ஸ் கிட்ஸ்களுக்கு தான் இந்த நிகழ்ச்சியின் அருமையே தெரியும் என்று சொன்னாலும் அதற்கு நிகரில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜயசாரதி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

விஜயசாரதி அஜித் பேட்டி :

அதே போல விஜயசாரதி பல பிரபலங்களையும் பேட்டி எடுத்து இருக்கிறார். அந்த வகையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்தை பேட்டி எடுத்து இருந்தார். அந்த வீடியோவில் அஜித்தின் முன் கால் மேல் கால் போட்டு விஜயசாரதி கேள்வி கேட்டு இருப்பார். அந்த விஷயத்தால் அஜித் ரசிகர்கள் அப்போது அவரை பயங்கரமாக திட்டி இருக்கின்றனர்.

வீடியோவில் 6 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

அத மட்டும் சொன்னா :

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து அவர் அஜித்திடம் சொன்னாராம். அதற்கு அஜித் ‘இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, சொன்னாரு. அதெல்லாம் தாண்டி இன்னொன்னு சொன்னாரு அதெல்லாம் சொன்ன என்ன இன்னும் கழுவி ஊத்துவாங்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார் விஜயசாரதி. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisement